Advertisment

ஹரியானா அரசியல்வாதிகள் மத்தியில் சுறுசுறுப்பாய் இயங்கும் 14 வயது ரிப்போட்டர்

மேலும் அரசியல்வாதிகள் எங்கே செல்கிறார்கள், அவர்களின் நடவடிக்கைகள் என்ன என்பதை செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொள்வேன் - குர்மீத்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Haryana assembly elections 2019 14-year-old reporter

Haryana assembly elections 2019 14-year-old reporter

 Varinder Bhatia

Advertisment

Haryana assembly elections 2019 14-year-old reporter :  ஹரியானா தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இருக்கின்ற வேளையில் 14 வயது மிக்க குட்டி ஊடகவியலாளர் இங்கும் அங்கும் சென்று செய்திகள் சேகரித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். குர்மீத் கோயத் என்று அழைக்கப்படும் அவர் பெரிய பெரிய அரசியல் கட்சித் தலைவர்களை பேட்டி காண்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். பிவானி நகரில் இருக்கும் பானி கிராமத்தில் பிறந்த இவர் தற்போது ஜிந்தில் குடியிருந்து வருகிறார். ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜனநாயக் ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சௌத்தலா மற்றும் திக்விஜய் சௌத்தலா உள்ளிட்டோரை பேட்டி எடுத்துள்ளார்.

 

ஜூனியர் ரிப்போட்டராக வலம் வரும் குர்மீத் கோயத் . கடந்த சில மாதங்களில் இவர் 200க்கும் மேற்பட்ட வீடியோக்களை தன்னுடைய யு.டியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். ஜிந்தில் இருக்கும் ஹர்ஷ் சர்வதேச பள்ளியில் படித்துவரும் இவர் ஜனவரி மாதம் ஜிந்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளை பேட்டி எடுக்கும் விதம் கண்டு இன்ஸ்பயர் ஆகியுள்ளதாக கூறியுள்ளார்.

இவர் முதன்முதலாக பேட்டி எடுத்தவர் ஜெ.ஜெ.பி. கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் எம்.பியுமான துஷ்யந்த் சௌத்தலா. நான் அவரிடம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டேன். கிடைத்தது என்று கூறினார். துஷ்யந்திடம் இவரை குறித்து கேட்ட போது “நான் மிகவும் வியப்படைந்தேன். அவர் அனைத்து வகையான அரசியல் கேள்விகளையும் கேட்டார். நான் அவரிடம் பள்ளிக்கூடம் செல்கிறாயா என்று கேட்ட போது, நான் வகுப்பில் முதல் மாணவன் என்று பதில் அளித்ததாக தன்னுடைய அனுபவம் குறித்து கூறுகிறார் துஷ்யந்த்.

கும்ரீத் கோயத்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக அரசியல்வாதிகளின் எண்களை பெற்று அவர்களிடம் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக் கொள்கிறார். மேலும் அரசியல்வாதிகள் எங்கே செல்கிறார்கள், அவர்களின் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்து அறிந்து கொள்வதாக கும்ரீத் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க : ஹரியானா தேர்தல் 2019 : பாஜகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் ஜாட் தொகுதிகள்…

டெல்லியில் ஃபூட்வேர் பிசினஸ் வைத்து நடத்தும் அவருடைய தந்தை ஜித்தேந்தர் குமார் இது குறித்து கூறுகையில் “முதன்முறையாக குர்மீத் நான் பத்திரிக்கை துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று கூறிய போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அனைத்தையும் மிகவும் வித்தியசமாக செய்ய விரும்புவன் குர்மீத். 8ம் வகுப்பில் 85% மதிப்பெண்கள் பெற்றான்” என்றார். இவருடைய தாயார் ராணி தேவி ஆரம்ப பள்ளி ஆசிரியர்.

குர்மீத் இந்தி, ஆங்கிலம், ஃபிரெஞ்ச், பஞ்சாபி, ஹரியான்வி ஆகிய மொழிகளில் பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ் கம்யூனிகேசன் படிக்க வைப்பேன் என்று அவருடைய தந்தை உறுதி அளித்துள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Haryana Haryana Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment