scorecardresearch

நெஞ்சை உலுக்கும் புகைப்படம்..வீர மரணமடைந்த தந்தைக்கு இறுதி மரியாதை செய்த சிறுவன்..அவனை தூக்கி அழுத சக காவலர்!

கல் நெஞ்சம் படைத்தவர்களை கலங்க வைத்துள்ளது.

heart touching photo
heart touching photo

நாட்டின் அமைதிக்காவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் இன்னுயிரை தியாகம் செய்யும் நமது சரித்திர நாயகர்களான ராணுவ வீரர்கள், எல்லை காக்கும் காவலர்களுக்கு அனைவரது மனதிலும் என்றுமே தனி இடம் உண்டு.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் ஒவ்வொரு ராணுவ வீரர்களையும், படை காவலர்களையும் வணங்குவதில் நாட்டு மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்வார்கள். தங்கள் குடும்பம், குழந்தைகள், நண்பர்கள், வாழும் இடத்தை விட்டு, நாம் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நாள் தோறும் எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு சொல்லி ஓயாது.

சினிமாவில் வரும் ஹீரோக்கள் 3 மணிநேரம் மட்டுமே, ஆனால் எல்லையில் நிற்கும் நமது ரியல் ஹீரோக்கள் தங்களது கடைசி மூச்சு வரை நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்தே தங்களது உயிரை விடுகின்றனர்.

more read.. மனித பாசத்தை மிஞ்சிய நாயின் வீடியோ.

கடந்த வாரம், ஜம்மூ காஷ்மீர் அனாந்தாங் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் அர்ஷத் கான், தீவிரவாத தாக்குதலால் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட அர்ஷத் கானுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கின்றான். தந்தையின் இறுதி சடங்கில் அவனும் கலந்துக் கொண்டு தனது தந்தைக்கு உரிய மரியாதை செய்தான். அப்போது அவனின் நிலையைக் கண்டு சக காவலர் ஒருவர் அவனை தூக்கி பிடித்து கட்டியணைத்து அழத புகைப்படம் கல் நெஞ்சம் படைத்தவர்களை கலங்க வைத்துள்ளது.

அர்ஷத் கானின் 4 வயது குழந்தை உஹ்பானை, தூக்கிச் சென்றது எஸ்.பி., ஹசீப் முகல் என்பது தெரியவந்துள்ளது. அர்ஷத் கான், ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். அவர் 2002 ஆம் ஆண்டு மாநிலத்தின் போலீஸாக தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக அவர் சதார் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியாக இருந்தார்.

தனது தந்தைக்கு என்ன நடந்து என்பது கூட தெரியாமல் அந்த சிறுவன், மலரை எடுத்துக் கொண்டு அவரின் காலடியில் வைத்த வீடியோவும் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Heart touching photo police man carrying killed cops 4 year old son