Panama Papers LIVE UPDATES : பனாமா பேப்பர்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன?
Panama Papers LIVE UPDATES: புதிய பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இந்தியர்கள் யார் யார்? பனாமா பேப்பர்ஸ் லீக் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
Panama Papers LIVE UPDATES: புதிய பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இந்தியர்கள் யார் யார்? பனாமா பேப்பர்ஸ் லீக் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
Panama Papers LIVE UPDATES : சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையை உருவாக்கிய பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தையும், பனாமா நாட்டில் இருக்கும் மொசாக் ஃபோன்சக்கா நிறுவனத்தைப் பற்றியும் புதிய தகவல்கள் வெளியீடு.
Advertisment
பனாமா பேப்பர்ஸ் பற்றிய தகவல்கள் உலக அரங்கில் வெளிப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பின்பு, மீண்டும் பெரிய பிரச்சனையாக உருவாகி இருக்கின்றது. புதிய தகவல்களில் எத்தனை இந்தியர்கள் கணக்கில் காட்டாத சொத்துகளை வெளிநாடுகளில் இருக்கும் தொழில்துறையில் முதலீடாகவும், பணமாகவும் பெற்றிருக்கின்றார்கள் என்பதை வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ். இதை ஆங்கிலேயத்தில் படிக்க
Panama Papers : மொஸாக் ஃபோன்செக்கா நிறுவனம்
Panama Papers: பனாமா பேப்பர்ஸ் மூலமாக இதுவரை வந்திருக்கும் தகவல்கள்...
Advertisment
Advertisements
4.22pm: விசாரணையின் மூலம் எப்படி உண்மைகள் கொண்டுவரப்பட்டது? #PanamaPapers
04:04pm: கால்பந்தாட்ட வீரர் லியோனெல் மெஸ்ஸி பற்றி உங்களுக்கு தெரியாத ஒன்று...
Panama papers : கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி
புதிதாக வெளியிடப்பட்ட பனாமா பேப்பரில் பார்சிலோனாவின் மெஸ்ஸியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அர்ஜெண்டினா குழுவிற்கு தலைமை ஏற்று ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றார் மெஸ்ஸி. இவர் மீதும் இவருடைய தந்தை மீதும் ஏற்கனவே வருமான வரி ஏய்ப்பு விசாரணை ஸ்பெயினில் நடைபெற்றிக் கொண்டிருக்கையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் மெஸ்ஸி.
3:41pm: இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணை தொடர்பாக எஸ்.கே. பஜோரியா நிறுவனத்தின் தலைவர் ஷிஷிர் பஜோரியாவிடம் பேசிய இரண்டாவது நாளிலே பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க முயற்சி செய்துள்ளார். அது தொடர்பாக அவர் அனுப்பிய மின்னஞ்சலின் பிரதி
Panama paper list : பஜோரியாவின் மின்னஞ்சல்
3.35pm: 2016ல் வெளியிடப்பட்ட அறிக்கையின் முடிவுப்படி
நடத்தப்பட்ட சர்வதேச விசாரணைகள் - 150
சர்ச்சையில் சிக்கிக் கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை - 426
இதுவரை இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட சோதனைகள் - 58
இதுவரை இந்தியாவில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் - 16
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் காட்டப்படாத பண மதிப்பு - ரூ. 1088 கோடி
3: 33pm: புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் பனாமா பேப்பர்களில் புதிதாக 1.2 மில்லியன் ஃபைல்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் மொஸாக் ஃபோன்செக்கா நிறுவனம் மற்றும் இதர நிதி நிறுவனங்களுக்கும் இடையேயான வர்த்தக ரீதியான உறவினையும் வெளிப்படுத்தியுள்ளது.
A new leak from the #PanamaPapers reveals the chaotic scramble by Mossack Fonseca to survive. It also sheds light on unknown criminal investigations and reveals new findings about the world's global elite. https://t.co/wO1BSkLjt8pic.twitter.com/Vk5uLxZpax
12.262pm: பனாமா பேப்பர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்கள் என்னென்ன?
12.21pm: 2016ல் பனாமா தொடர்பான தகவல்கள் வெளிவருவதற்கு முன்பு, மொஸாக் ஃபோன்செக்கா நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்கள் பலருக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம் செய்திருக்கின்றது.
11:46am: கால்பந்து விளையாட்டு வீரர் லியோனெல் மெஸ்ஸி அவருடைய சொத்துகள் பற்றிய விபரங்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. எதிர் பார்த்ததிற்கும் மேலாக கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை வைத்திருக்கின்றார்கள் மெஸ்ஸி மற்றும் அர்ஜெண்டினா நாட்டின் அதிபர்
11:13am: பனாமா பேப்பர்ஸ் தொடர்பான தகவல் தெரிந்துவுடன் இக்பால் மிர்ச்சி குடும்பம், அவர்களின் வெளிநாட்டு வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
10.40am: இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணை தொடர்பாக எஸ்.கே. பஜோரியா நிறுவனத்தின் தலைவர் ஷிஷிர் பஜோரியாவிடம் பேசிய இரண்டாவது நாளிலே பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க முயற்சி செய்துள்ளார். ப்ரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் சொத்து சேர்த்து தொடர்பாக அவருடைய பெயரும் அதில் இடம் பெற்றுள்ளது. இவர் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
10.27am: பனாமா பேப்பர்ஸ் தகவல்கள் வெளியில் கசிந்தவுடன், மொஸாக் ஃபோன்சக்காவில் பணிபுரிந்த ஊழியர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், சட்ட வல்லுநர்கள், வங்கி மேலாளர்கள், அக்கவுண்ட்டன்ஸ் ஆகியோரிடம் மின்னஞ்சல் மூலம் ஆலோசனை பெற்றது மொஸாக் ஃபோன்சக்கா