வளையல், டர்பன் போன்ற பல்வேறு மதச் சின்னங்கள் இந்தியச் சமூகத்தில் பொதுவானதாக இருந்தாலும், அரசு’ முஸ்லிம் பெண்களை மட்டும் குறிவைத்து ஹிஜாப் அணியக்கூடாது என சொல்வது, “விரோத பாகுபாட்டிற்கு” ஒரு உதாரணம் என்று ஹிஜாப் வழக்கில்’ மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணையின் போது தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள முன் –பல்கலைக்கழக கல்லூரிகளில்’ மாணவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட சீருடை இல்லை என்பதாலும், அதன் விளைவாக ஹிஜாப் மீது தடை விதிக்கும் எந்த விதியும் இல்லை என்பதாலும்’ பாகுபாடு இன்னும் அதிகமாக உள்ளது என்றும் அவர் வாதிட்டார்.
அரசால் பரிந்துரைக்கப்பட்ட சீருடைகள் எதுவும் இல்லாத நிலையில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் வகுப்புகளுக்கு வருவதைத் தடுப்பதற்கான முயற்சிகள், மதத்தின் அடிப்படையில் “பாகுபாடு” ஆகும், இது அரசியலமைப்பின் 15 வது பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது என்று’ கர்நாடக முன்னாள் அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு முன்பு தெரிவித்தார்.
“இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் மத அடையாளங்களைக் கொண்டுள்ளனர். நமது சமூகத்தில் இருக்கும் பன்முகத்தன்மையை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். ஆனால்’ இந்த விரோதப் பாகுபாட்டிற்கு ஹிஜாப் மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? அதற்குக் காரணம் மதம் அல்லவா?” என குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“சீக்கியர்கள் டர்பன் அணிவதைத் தடை செய்ய முடியுமா? பெண்களும் வளையல் அணிகிறார்கள். அப்படி இருக்கையில்’ ஏழை முஸ்லீம் சிறுமிகளுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?” என மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களுக்கு எதிராக அரசு பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறும் பிரிவு 15 இன் கீழ் அவர் கேட்டார்.
ஹிஜாப் அணிந்த பெண்களை வகுப்புகளுக்குச் செல்வதைத் தடுப்பது “மதத்தின் காரணமாக மட்டுமே”, ஏனெனில் துப்பட்டா, வளையல், பொட்டு அல்லது சிலுவையைச் சுமப்பவர்களுக்கு எதிராக அத்தகைய “பாகுபாடு” இல்லை என்று குமார் கூறினார்.
“டர்பன் அணிந்தவர்கள் ராணுவத்தில் இருக்க முடியும் என்றால், மதச் சின்னத்தை அணிந்த ஒருவர் வகுப்புகளில் கலந்துகொள்ள ஏன் அனுமதிக்க முடியாது- தனது மதத்தைப் பின்பற்றுவது அவளுடைய உரிமை – உலகளாவிய கல்வி, குறிப்பாக பெண் கல்வி விரும்பும் இப்போதைய சூழலில்’ இது ஒரு கொடூரமான முடிவு.
பெண்களில், முஸ்லிம் பெண்கள் மிகக்குறைந்த கல்வியறிவு மற்றும் வகுப்பறைகளில் குறைந்த பிரதிநிதித்துவம் பெற்றவர்கள் என்ற உண்மையை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பாகுபாடு’ அவர்களின் கல்விக்கு அழிவை ஏற்படுத்தும்,” என்று முன்னாள் ஏஜி கூறினார்.
கல்வியின் நோக்கம் பன்மைத்துவத்தை மேம்படுத்துவதே தவிர, ஒருமுகத்தன்மை அல்ல. “இது வேற்றுமையில் ஒற்றுமை பற்றியது” என்று குமார் கூறினார்.
பியு கல்லூரிகளில்’ மாணவர்களுக்கு சீருடை இல்லை என்றும், 1983 ஆம் ஆண்டு கர்நாடக கல்விச் சட்டத்தின் கீழ் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்யும் விதி எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“நான் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால், நான் எப்படி வகுப்பிற்கு வெளியே வைக்கப்படுகிறேன், எந்த விதியின் கீழ்? அத்தகைய செயலுக்கு யார் அனுமதி அளித்தது?
மாநில அரசால் நடத்தப்படும் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகளுக்கான வழிமுறைகள், மாணவர்களுக்கு எந்த வகையான சீருடையையும் பரிந்துரைப்பது சட்டவிரோதமானது என்று கூறுகிறது. அரசாங்கத்தால் சீருடை எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை என்ற உண்மையையும் அரசு ஆணை அங்கீகரிக்கிறது, ”என்று குமார் கூறினார்.
பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதைத் தடுக்கும் எந்தவொரு அரசாங்க உத்தரவும்’ நீதிமன்றங்கள் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பதற்கு ஒப்பாகும் என உடுப்பி கல்லூரி மாணவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் யூசுப் முச்சாலா வாதிட்டார்.
இதையும் படிக்க
மாணவ- மாணவிகள் சீருடை: கர்நாடகா விதிமுறை என்ன?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“