Home Garden Challenge during lockdown : கொரோனா வைரஸ் ஊரெல்லாம் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். முடிந்த வரையில் பல்வேறு விதமாக தங்களை “என்கேஜ்டாக” வைத்துக் கொள்ள அடிக்கடி பல்வேறு சேலஞ்ச்களை விடுவதும், ஏற்பதுமாக அவர்களின் குவாரண்டைன் பொழுதுகள் கழிகின்றது. இந்நிலையில், கேரளாவில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த எஸ்.பி. ஒருவர் வித்தியசமான சேலஞ்சை மக்களுக்கு விடுத்துள்ளார்.
Advertisment
/
எர்ணாகுளம் மாவட்டம் எஸ்.பி.யாக இருப்பவர் கார்த்திக். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக். தற்போது எர்ணாகுளம், ஆலுவாவில் பணி புரிந்து வருகிறார், லாக்டவுன் காலத்தில் தங்களின் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை, தன்னுடைய தோட்டத்தில் வளர்த்து வருகிறார்.
Advertisment
Advertisements
தன்னுடைய மகன் ப்ரஜித் விநாயக்குடன் இணைந்து, தன்னுடைய முகாம் வீட்டில் இருக்கும் தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட்டு வளர்த்து வருகிறார். இவரை பார்த்து அக்கம் பக்கத்தில் வசிக்கும் பலரும் கார்த்திக் முயற்சியை பார்த்து, தாங்களும் பின்பற்ற துவங்கியுள்ளனர்.
கேரள டிஜிபியான லோக்நாத் பெகாரா இவரின் முயற்சியை பாராட்டியுள்ளார். மேலும் அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் இதனை பின்பற்ற வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
ஏப்ரல் 15ம் தேதி, எர்ணாக்குளம் உயர்மட்ட காவல்துறை அதிகாரி விடுத்த சவாலை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் தோட்டப் பகுதிகளில் காய்கறிகள் மற்றும் செடிகளை நட்டு, சேலஞ்சினை ஏற்றுள்ளனர்.
நமக்கான உணவினை நம்மால் உருவாக்க முடியும் என்ற நிலை வந்தால், சந்தைகளுக்கு செல்வதும் தவிர்க்கப்படும். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள இதையும் கூட மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil