By: WebDesk
Updated: November 23, 2019, 03:49:07 PM
Liz Mathew, Ravish Tiwari
How BJP dealt with Ajit Pawar : பாஜக தலைவர்களுக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருக்கும் இடையே சமீப நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா மகாராஷ்ட்ரா அரசியல் மாற்றங்கள் குறித்த முடிவுகளை மேற்கொள்ள பூபேந்தர் யாதவை நியமித்தார். மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்ற தேர்தலுக்காக நியமிக்கப்பட்டவரும், பாஜகவின் பொதுச்செயலாளருமான இவர் நேற்று மும்பை விரைந்தார்.
சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் கட்சியினருடனான ஆலோசனைகள் குறித்த முடிவுகள் தொடர்ந்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்ட வண்ணமே இருந்தது. ஆனால் பாஜக தங்களின் ஒவ்வொரு நகர்வையும் அமைதியாக எடுத்து வைத்தது. வெள்ளை கிழமை மதியத்துக்குள் அரசு அமைப்பது குறித்து முடிவெடுத்துவிடப்படும் என்று சிவசேனா கூட்டணியினர் அறிவிக்க, பூபேந்திய யாதவ் நேற்று மும்பை விரைந்தார். கூட்டணி குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வரை அனைவரும் இந்த கூட்டணி தான் மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்கும் என்று 100% நம்பிக்கை வரும் வரை அமைதியாக இருந்தனர்.
கடந்த வாரம் வரை சிவசேனாவுக்கான வாய்ப்புகள் வெளிப்படையாகவே இருந்தது. இருந்தாலும் நவம்பர் 10ம் தேதி, ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டோம் என்று வெளிப்படையாக பகத் சிங் கோசியாரியிடம் அறிவித்தது பாஜக. பின்னர் மாற்றுத்திட்டங்கள் குறித்து யோசனை செய்ய துவங்கியது. பின்னர் பாஜக சார்பில் யாதவை நியமித்து அறிவித்தார்ர் அமித் ஷா.
உத்தவ் தாக்கரேவின் குடியிருப்பே கசந்த அனுபவம் போல் ஆகிவிட்டது என்று பாஜக தரப்பினர் கூறினர். அமித் ஷாவோ, சிவசேனா – காங்கிரஸ் – என்.சி.பி காங்கிரஸ் தங்களின் கூட்டணி குறித்து யோசிக்கட்டும் என்று கூறிவிட்டு வேறு திட்டங்களை செயல்படுத்த துவங்கியதாக பாஜகவினர் அறிவிக்கின்றனர். குறிப்பாக ரிசல்ட் வெளியான நாளில் துவங்கி பாஜக ஆட்சி அமைக்காது என்று கூறப்பட்ட நாள் வரை மகாராஷ்ட்ரா விவகாரத்தில் அமித் ஷா நேரடியாக எந்தவிதமான செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை. நவம்பர் 10ம் தேதியில் இருந்து தான் தன் திட்டங்கள் ஒவ்வொன்றாய் செயல்படுத்த துவங்கினார் அமித் ஷா.
இதே நேரத்தில் காங்கிரஸ், என்.சி.பி மற்றும் சிவசேனா கட்சியினர் தங்களின் திட்டங்கள் குறித்து வெளியிடுவதையும் பாஜக கவனித்து வந்தது. ஆட்சி குறித்து சிவசேனா ஆணையிடுவதை நிச்சயமாக பாஜக விரும்பவில்லை. மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து கொள்ள சிவசேனாவிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகள் முழுமைக்கும் ஆட்சியை பாஜக தான் அமைக்கும் என்றும் கேட்டுக் கொண்டது. சிவசேனா 2.5 ஆண்டுகள் ஆட்சிக்கு உரிமை கோரியது. முதல்வர் பதவி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.
இந்த கூட்டணியை பொறுத்தவரை ஒன்று காங்கிரஸ் பின்வாங்கும் அல்லது சிவசேனா ஐடியாலஜி முறையில் வேண்டாம் என்று கூறும் என நம்பிக்கையுடன் காத்திருந்தது பாஜக. ஆனால் சிவசேனாவோ சரத் பவார், சோனியா காந்தி ஆகியோர் ஒத்திசைவுடன் முன்னேறிக் கொண்டே சென்றது. சிவசேனா – காங்கிரஸ் – என்.சி.பி கட்சியினர் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்ட போது, பாஜக தன்னுடைய திட்டத்தை மாற்றியது. தேவேந்திர ஃபட்னாவிஸ், அமித் ஷா ஆகியோர் அஜித் பவாரிடம் பேசியது தெரியவந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடையும் என்று பாஜகவினர் எதிர்பார்த்தனர். தானாகவே கூட்டணி முறியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தை சுமூக நிலையில் நடைபெற்று அறிவிப்புகள் வெளியாக தன்னுடைய இறுதி ஆட்டத்தை அரங்கேற்றியது பாஜக.
இன்று காலை ராஜ்பவனில் மிகவும் எளிமையாக முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற்றது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் பொறுப்புகளை ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஏற்றுக் கொண்டார். சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று யோசித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அக்டோபர் 30ம் தேதி அஜித் பவார் என்.சி.பியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பாஜக ஆட்சி அமைக்காது என்று அறிவித்த பின்னர் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி என்.சி.பியை ஆட்சி அமைக்க அழைத்தது. ஆனால் அவர்களுக்கௌ ஆதரவு அதிகமாக இல்லை. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
இந்த வாரத்தின் துவக்கத்தில் சரத் பவார் பிரதமர் மோடியுடன் நடத்திய 40 நிமிட ஆலோசனை குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கருத்து தெரித்தார். மேலும் அஜித் பவார் ஒரு நாள் முழுவதும் தகவல் தொடர்புக்கு அப்பாற்பட்ட நிலையில் அவர் இருந்தது எப்படி? அப்போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விகள் மிகவும் பலமாக மனதில் தோன்றியது. ஆனாலும் பாஜகவும் என்.சி.பியின் அஜித் பவாரும் இன்று காலை பதவி ஏற்றனர். மகாராஷ்ட்ராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக அஜித் பவார் இருப்பதால் அந்த கட்சியில் இருக்கும் அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்றத்தில் 120 இடங்களை பாஜகவும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை வேட்பாளர்களும் பெற்றுள்ளனர். தற்போது என்.சி.பி 54 இடங்களை வென்றதால் 174 இடங்களில் தக்க வைத்து ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக.