“பாஜகவுக்கு ஆதரவு அளித்தது அஜித் பவாரின் சொந்த முடிவு” – தெளிவு படுத்திய சரத் பவார்

சிவசேனா ஆட்சி அமைக்கும் என்று நேற்றிரவு சொன்ன நிலையில் அஜித் பவார் தன்னுடைய ஆதரவை பாஜகவுக்கு அளித்ததால் என்.சி.பியில் குழப்பம் நிலவுகிறது!

By: Updated: November 23, 2019, 10:20:00 AM

Sharad Pawar on Ajit Pawar decision : மகாராஷ்ட்ரா மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று கேள்வி தொடர்ந்து பலரின் மனதிலும் எழுந்த வண்ணம் இருந்தது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் புதிய ஆட்சி அமைப்பதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஒரு வழியாக பேச்சுவார்த்தைகள் நேற்று முடிவுற்றது. டிசம்பர் 1ம் தேதிக்குள் ஆட்சி அமைக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று காலையில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்டார். யாரும் எதிர்பார்க்காத அரசியல் திருப்பு முனையாக இது அமைந்தது.

Sharad Pawar on Ajit Pawar decision

இந்நிலையில் அஜித் பவார் பாஜக அரசுக்கு ஆதரவு அளிப்பது அவருடைய தனிப்பட்ட முடிவு. அதனை தேசியவாத காங்கிரஸ் கட்சியோ, அதன் உறுப்பினர்களோ எந்த வகையிலும் ஆதரவு அளிக்கவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்.

மகாராஷ்ட்ராவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆட்சிக்கு அனைவரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சரத் பவாரின் ட்வீட்டும் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.  நடைபெற்று முடிந்த தேர்தலில் 105 இடங்களை வென்றது பாஜக. தேசியவாத காங்கிரஸ் 45 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்ட்ரா புதிய ஆட்சி தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Sharad pawar on ajit pawar decision supporting bjp to form the maharashtra government is his personal decision

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X