வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ விரும்புகிறீர்களா?

முதலமைச்சர் பொது நிவாரண நிதி : கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சென்னையில் வெள்ளம் வந்த போது நமக்கு மிகவும் உறுதுணையாக இருந்து உதவியவர்கள் நம் அண்டை மாநிலத்தார்கள் தான். தற்போது நம்முடைய கேரள சகோதர சகோதரிகளுக்கு நம்முடைய உதவி மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது.

முகநூல், ட்விட்டர் மற்றும் இதர சேவைகள் மூலமாக கேரளாவிற்கு உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை தமிழக மக்கள் செய்து வருகின்றனர். உங்களில் சிலருக்கு, அம்மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அந்த உதவியை எப்படி செய்வது, யார் மூலம் பணம் கொடுத்து உதவுவது, கொடுத்த பணம் கேரள மக்களுக்கு சென்றடைந்ததா என்ற சந்தேகம் தோன்றும் என்பதை நாங்கள் அறிவோம்.

சில நம்பத்தகுந்த மக்களிடம் அல்லது என்.ஜி.ஓக்களிடம் மட்டும் உங்களின் உதவித் தொகையை கொடுத்து அனுப்புங்கள். அப்படி தர விருப்பம் இல்லை எனில் நீங்கள் நேரடியாக கேரள முதலமைச்சர் பொது நிவாரண நிதி வங்கி கணக்கிற்கு உங்களால் இயன்ற நிதியை அளித்து உதவலாம்.

இணையம் மூலமாக உதவ விரும்புகிறவர்கள் இந்த லிங்கில் சென்று உதவலாம்.  //donation.cmdrf.kerala.gov.in/

கேரள முதலமைச்சர் பொது நிவாரண நிதி வங்கி விபரம்

Chief Minister’s Distress Relief Fund

வங்கி கணக்கு எண் : 67319948232

Bank: State Bank of India

IFSC : SBIN0070028

SWIFT CODE : SBININBBT08

இத்தகவல் குறித்த கேரள முதலமைச்சர் அலுவலக அதிகாரப் பூர்வ ட்விட்டர் தகவல் 

 

கேரளாவில் நடக்கும் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close