Advertisment

கேரளா வெள்ளம் : கேரளாவிற்கு உதவ முன்வரும் பிற மாநில அரசுகள்

Kerala Rains : ஹரியானா முதல்வரைத் தொடர்ந்து பிஹார் முதல்வரும் ரூபாய் 10 கோடி நிதி உதவி அளித்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேரளா மழை, கேரளா மழை,

கேரளா மழை

கேரளா மழை ( Kerala Floods 2018) : கேரளாவில் தென்மேற்கு மழை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறிவருகிறது.

Advertisment

தொடர்ந்து மீட்புப் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டுச் சென்றார். அதிகாலையிலேயே திருவனந்தபுரத்தில்  நரேந்திர மோடி கேரள முதலமைச்சர் மற்றும் இதர அமைச்சர்களை நேரில் சந்தித்தார்.  வரலாறு காணாத மழைக்கு இதுவரை சுமார் 324 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி, கேரளா மழை இன்று காலை கொச்சி செல்வதற்கு முன்பு கேரள முதல்வரை சந்தித்த மோடி

மீட்புப் பணி நிலவரம் பற்றி அறிந்து கொள்ள

கேரளா மழை - மண் சரிவு ஏற்படும் அபாயம்

வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று  முதல் கூடுதலாக 23 ஹெலிகாப்டர்கள் மற்றும் 200 மோட்டார் படகுகள் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி கேரள பயணம்

நேற்று  நள்ளிரவு டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி தற்போது கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதியினை பார்வையிட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

கேரளா மழை, கேரளா வெள்ளம், நரேந்திர மோடி கொச்சி விமான நிலையத்தில் நரேந்திர மோடி

நேற்று மட்டும் சுமார் 82,000 நபர்களை வெள்ளம் சூழந்த பகுதிகளில் இருந்து மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதியில் இருந்து இதுவரை இந்த வெள்ளத்திற்கு சுமார் 173 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் (17/08/2018) 31 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

03.30 pm : கேரளாவில் தற்போது பெய்தது வரலாறு காணாத மழை என வானிலை ஆய்வு மையம் அறிக்கை. அது தொடர்பான முழுமையான  செய்தியினைப் படிக்க

02.30 pm : கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட இழப்புகள் அதிகம். இதுவரை ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஒரு காணொளி

02.15 pm : ஆம் ஆத்மி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரண நிதியாக அளிப்பார்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

02.00 pm : ஹரியானா முதல்வரைத் தொடர்ந்து பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் 10 கோடி ரூபாய் கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

01.30 pm : கேரள மக்களுக்கு தேவையான குடிநீரை தொடர்வண்டி வழியாக கொடுத்தனுப்பிய மகாராஷ்ட்ரா மாநிலம். 7 லட்சம் லிட்டர் குடிநீரை புனேவில் இருந்து இன்று அனுப்பியது அம்மாநிலம்.

கேரளா மழை, கேரளா வெள்ளம், கேரளா மழை வெள்ளம் புனேவில் இருந்து ரயில் மூலம் கேரளா வந்தடைந்த குடிநீர் (புகைப்படம் - Pavan Khengre)

12.30 pm : கேரளாவிற்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவிப்பு. தமிழக அரசு சார்பாக ஏற்கனவே 5 கோடி ரூபாய் கேரளாவிற்கு கொடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 5 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

11.30 am : புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால் இன்றும் நாளையும் கேரளத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கொச்சியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மத்திய கேரள மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.

11.00 am: கேரள மக்களுக்கு உதவ விரும்புகிறீர்களா?

https://tamil.indianexpress.com/india/how-to-donate-money-to-chief-ministers-distress-relief-fund-to-help-kerala-people/

10.45 am:  கேரளா மழை வெள்ளத்தால் மிகவும் மோசமான பாதிப்பினை சந்தித்துள்ளது. அதனால் முதல்கட்ட நிவாரண நிதியாக 2000 கோடி ரூபாய் கேட்டு உயர்மட்டக் குழு ஆலோசனையில் பிரதமரிடம் பினராயி விஜயன் கேட்டுள்ளார். உடனடி நிதியாக ரூபாய் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பிரதமர் அறிவித்திருப்பதாக கேரள முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

10.00 am : மோசமான வானிலை நிலவுவதால் மோடியின் மேற்பார்வை ரத்தானது. கொச்சி விமான நிலையம் முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதால் டெல்லி திரும்ப காலதாமதம் ஆகலாம். இதற்கிடைப்பட்ட நேரத்தில் ராணுவம் மற்றும் கப்பற்படை மேலதிகார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் நரேந்திர மோடி.

கேரளா மழை வெள்ளம், கேரளா வெள்ளம், மோடி கேரளா வருகை, உயர்மட்டக் குழு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் பிரதமர்

Narendra Modi Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment