ரபேல் போர் விமான விவகாரம் : ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்கோய்ஸ் ஹோலாண்டே சில தினங்களுக்கு முன்பு “ரபேல் போர் விமானங்களை ப்ரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதற்கான ஆஃப்செட் பாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவில் இருந்து அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தினை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய சூழலையும் கட்டாயத்தையும் இந்திய அரசு உருவாக்கியது” என்று குறிப்பிட்டார். இது குறித்து முழுமையான செய்தியை படிக்க
இதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர்கள் அடுக்காக தங்களின் குற்றங்களை முன்வைத்தனர். இதற்கு பதில் சொல்லும் வகையில் கட்டுரை ஒன்றை முன் வைத்தார்.
ரபேல் போர் விமான விவகாரம் விளக்கம் அளித்த அருண் ஜெட்லி
அதில் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் ஆஃப்செட் காண்ட்ராக்ட் முழுக்க முழுக்க கமர்சியல் அடிப்படையில் அந்நிறுவனமே தேர்வு செய்தது. இதில் மத்திய அரசின் குறுக்கீடு எதுவும் இல்லை என்று கூறினார். ஒரு உண்மைக்கு இரண்டு முகங்கள் இருக்காது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ரபேல் போர் விமான விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ப. சிதம்பரம்
இதற்கு கேள்வி கேட்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மற்றும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் “உண்மைக்கு இரண்டு முகங்கள் இருக்க முடியாது என்கிறார் நிதி அமைச்சர் திரு. ஜெட்லி. முற்றிலும் சரி. எந்த முகம் உண்மை என்று எப்படி கண்டு பிடிப்பது ?” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார்.