IRCTC Train Ticket Transfer Process : பல சலுகைகளை வழங்கிய ஐஆர்சிடிசி இணையத்தில் மற்றொரு சேவையும் இருக்கிறது. அது தான் உங்கள் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றி கொடுக்கும் சேவை.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உறுதியான டிக்கெட்டை உங்களுக்கு தெரிந்த ஒரு நபரின் பெயருக்கு மாற்றும் வசதியை இந்தியன் ரயில்வேத்துறை வழங்குகிறது. அதாவது ரயில் பயணம் தொடங்குவதற்கு 24 நேரம் முன்பாக, உறுதியான டிக்கெட்டிக் மற்றொருவர் பயணிக்க ஏற்பாடு செய்ய முடியும்.
IRCTC : Transfer your ticket to another person : ரயில் டிக்கெட் மற்றொருவருக்கு மாற்றம்
ஏதோ ஒரு ஊருக்கு செல்ல, டிக்கெட் பெற்ற பிறகு திடீரென உங்கள் பயணம் ரத்தாகும். அப்போது பதிவு செய்யப்பட்ட டிக்கெட் மட்டுமின்றி பணமும் பயனின்றி போகும். அந்த நிலையை மாற்றவே இந்த வசதியை இந்தியன் ரயில்வேத்துறை கடைப்பிடித்து வருகிறது.
உங்களின் டிக்கெட்டில், உங்கள் குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவருக்கு ரயில் சேவையின் 24 மணி நேரங்களுக்கு முன்பு மாற்றலாம். எளிய முறையை நாங்கள் சொல்கிறோம்:
- உங்களின் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ஒரு பேப்பரில் பிரிண்டு அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
- ஆதார் அல்லது வாக்காளர் அட்டை போன்ற ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு விரைந்து செல்லுங்கள்.
- வெளியூர்களுக்கு செல்ல டிக்கெட் பதிவு செய்யும் கவுண்டருக்கு சென்று அங்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் மற்றும் அடையாள ஆவணத்தை கொடுத்து மற்றொருவர் பெயருக்கு மாற்றுமாறு கேளுங்கள்.
- அங்குள்ள அதிகாரி, உங்களின் டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்றித் தருவார்.
இத்தகைய சிறப்பான வசதியை ஐஆர்சிடிசி வழங்கினாலும், இந்த டிக்கெட் மாற்றத்தை உங்கள் இரத்த சொந்தம் அல்லது மனைவி/கணவருக்கு மட்டுமே மாற்றித் தர முடியும்.
சலுகை கட்டணத்தில் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது எப்படி ?