Advertisment

அபிநந்தனை ஒப்படைப்பதற்கு முன்பு நடந்தது என்ன? ஏன் அந்த தாமதம்?

'உள்ளூர்வாசிகள் உணர்ச்சிவசப்பட்டு என்னை தாக்க முயற்சி செய்தனர்'

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IAF Pilot Abhinandan Varthaman returns: ‘Recording of video before release led to delay’ - அபிநந்தனை ஒப்படைப்பதற்கு முன்பு நடந்தது என்ன? ஏன் அந்த தாமதம்?

IAF Pilot Abhinandan Varthaman returns: ‘Recording of video before release led to delay’ - அபிநந்தனை ஒப்படைப்பதற்கு முன்பு நடந்தது என்ன? ஏன் அந்த தாமதம்?

பாகிஸ்தான் பிடியிலிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், நேற்று (மார்ச்.1) வாகா எல்லை வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Advertisment

நேற்று இரவு 9.20 மணியளவில், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ், அபி நந்தனை இந்திய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் (BSF) ஒப்படைத்தனர். குரூப் கேப்டன் ஜே டி குரியன், இந்திய உயர் ஆணையத்தின் ஏர் அட்வைஸர், மற்றும் ஃபரீஹா பக்டி, (இந்தியா), பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக இயக்குனர் ஆகியோர், இந்த ஒப்படைப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க - Fact Check: அபிநந்தனுடன் வந்த அந்தப் பெண்மணி யார்?

முன்னதாக, அபிநந்தன் இந்திய வீரர்களிடம் ஒப்படைப்பதில் திடீரென்று தாமதம் ஏற்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து, லாஹூரில் இருந்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், இந்திய வீரரை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அவர் எல்லையை கடப்பதற்கு முன்பாக, பாகிஸ்தான் அதிகாரிகள் அவரின் வீடியோ வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டனர். அந்த வீடியோவை பாகிஸ்தானுக்கு ஏற்றவாறு எடிட் செய்ய அதிக நேரம் ஆனதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - 'விங் கமாண்டர் அபிநந்தன் நாடு திரும்பியதில் மகிழ்ச்சி' - இந்திய விமானப் படை

பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோ வெளியிடப்பட்டது. ஆனால், எந்தக் காரணமும் சொல்லப்படாமல் அந்த வீடியோ நீக்கப்பட்டது. அபிநந்தனிடம் அந்த வீடியோ வற்புறுத்தப்பட்டு எடுக்கப்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. அந்த வீடியோ அதிகமுறை எடிட் செய்யப்பட்டிருப்பது நன்றாக தெரிந்தது.

மேலும், அபி நந்தன் அந்த வீடியோவில், "நான் எனது இலக்கை கண்டறிய பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தேன். ஆனால், எனது விமானம் சுடப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் என்னிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டனர்" என்று சொல்வது எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, 'உள்ளூர்வாசிகள் உணர்ச்சிவசப்பட்டு என்னை தாக்க முயற்சி செய்தனர். அப்போது இரு ராணுவ அதிகாரிகள் வந்து என்னை மீட்டனர். பாகிஸ்தான் ராணுவ கேப்டன், என்னை பாதுகாத்து கொண்டுச் சென்று, மேலும் என்னை தாக்காமல் பார்த்துக் கொண்டார். உடனடியாக அவர்களது யூனிட்டிற்கு என்னை அழைத்துச் சென்ற ராணுவம், எனக்கு முதலுதவி அளித்து, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தேவையான சிகிச்சைகள் அளித்தனர்.

பாகிஸ்தான் ராணுவம் மிகவும் நேர்மையான தொழில்முறையை வெளிப்படுத்தியது, என்னை மிகவும் ஈர்த்தது" என்றும் அந்த விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க - ஜெய்ஷ் மதரஸாவின் நான்கு கட்டிடங்கள் மீது தாக்கியது உறுதி! - இந்திய விமானப்படை

Iaf
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment