Greater Visakhapatnam Municipal Corporation commissioner IAS officer Gummala Srijana : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் பெருநகர மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் ஸ்ரீஜனா கும்மலா. ஆந்திராவில் கொரோனா நோய் தடுப்பில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளனர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள். ஆந்திராவில் இந்த நோய்க்கு மொத்தம் 350-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 நபர்கள் பலியாகியுள்ளனர்.
Advertisment
ஸ்ரீஜனாவின் கணவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பேறுகால விடுப்பு எடுத்துக் கொள்வார் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் பிறந்த கைக்குழந்தையுடன் அலுவலகத்திற்கு 11ம் தேதி பணியாற்ற வந்துள்ளார். 22 நாட்கள் ஆன நிலையில் இவர் அலுவலகம் வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது இவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
2013ம் ஆண்டு பேட்சினை சேர்ந்த இவரின் அர்பணிப்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது. இவர்களின் விடாமுயற்சியும் உழைப்பும் வணங்கத்தக்கது என்று பொதுமக்கள் தங்களின் வாழ்த்துகளையும் நன்றிகளையும் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில், கொரோனா வார்டில் பணியாற்றி, நோய்வாய்பட்டு குணம் அடைந்த செவிலியர், மீண்டும் கொரோனா வார்டில் வேலை பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தார் கொச்சியை சேர்ந்த செவிலியர் ரேஷ்மா மோகன் தாஸ்.
ரிஷிகேஷில் திருமணத்தை நிறுத்திவிட்டு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறார் எஸ்.ஐ. ஷாகிதா ப்ரவீன். தற்போது இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தன்னுடைய சேவையை புரிய யாரும் செய்யாத காரியத்தை செய்துள்ளார். இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் பங்கு மிகவும் சிறப்பு மிக்கதாக அமைந்திருக்கிறது.