Advertisment

சட்டவிரோதமாக படகில் இந்தியாவுக்குள் நுழைய முயற்சி- தமிழக இன்ஜினியர் உட்பட 4 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்

டிடெசபிள் ஆன்-போர்டு மோட்டார் எஞ்சின் மூலம் இயக்கப்பட்ட படகு குறித்து நாங்கள் மேலும் ஆய்வு செய்கிறோம், என்று தேவபூமி துவாரகா மாவட்ட காவல்துறையின் கண்காணிப்பாளர் நிதிஷ் பாண்டே தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Tamilnadu engineer arrested

Tamil Nadu engineer, four others sent to seven-day police custody

மஸ்கட்டில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் குஜராத்தில் கைது செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, அவர் தனது தம்பி மற்றும் வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று ஈரானிய பிரஜைகளுடன், வெள்ளிக்கிழமை ஏழு நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டார்.

Advertisment

இன்ஜினியர் அசோக்குமார் முத்துரேலா, சரியான பயண ஆவணங்கள் இல்லாமல் ஈரானில் இருந்து ஓகா துறைமுகம் வழியாக இந்தியாவுக்குச் செல்ல, வாடகைக்கு எடுத்ததாகக் கூறிய படகில் பதிவு எண் எதுவும் இல்லை, குற்றம் சாட்டப்பட்டவர் சரியான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை, குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தின் சிறப்பு செயல்பாட்டுக் குழுவின் (SOG) அதிகாரிகள் 37 வயதான அசோக்குமார், அவரது தம்பி ஆனந்த்குமார் முத்துரேலா (35) மற்றும் மூன்று ஈரானிய பிரஜைகளை துவாரகா நகரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

படகில் பதிவு எண் எதுவும் இல்லை. டிங்கி படகு தொடர்பான எந்த ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. எனவே, டிடெசபிள் ஆன்-போர்டு மோட்டார் எஞ்சின் மூலம் இயக்கப்பட்ட படகு குறித்து நாங்கள் மேலும் ஆய்வு செய்கிறோம், என்று தேவபூமி துவாரகா மாவட்ட காவல்துறையின் கண்காணிப்பாளர் நிதிஷ் பாண்டே தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

வியாழக்கிழமை அதிகாலையில், ஓகா துறைமுகத்தில் கட்டுமானத்தில் உள்ள சிக்னேச்சர் பாலத்தை டிங்கி படகு நெருங்கிய போது, தேவபூமி துவாரகா மாவட்ட காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு, துவாரகா காவல்துறையின் உள்ளூர் குற்றப்பிரிவு மற்றும் ஓகா மரைன் காவல் நிலையங்களின் அதிகாரிகளின் கூட்டுக் குழுவால் மூன்று ஈரானிய பிரஜைகளுடன் அசோக்குமார் கைது செய்யப்பட்டார்,

மூன்று ஈரானிய பிரஜைகள் முஸ்தபா பலுச்சி (38), ஜாஷேம் பலுச்சி (25) மற்றும் அமீர் உசேன் பலுச்சி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஈரானின் துறைமுக நகரமான ஜாஸ்கில் (Jask) வசிக்கும் அவர்கள் தங்களை மீனவர்கள் என்று கூறி வருவதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக இன்ஜினியர், ஈரானிய பிரஜைகளுடன் சுமார் ஐந்து-ஆறு நாட்களுக்கு முன்பு ஜாஸ்க் துறைமுகத்தில் இருந்து ஓகா துறைமுகத்திற்குள் நுழைந்ததாக எஸ்பி கூறினார்.

நால்வரும் ஈரானில் இருந்து இந்தியக் கடற்கரையை அடைய ஏதேனும் பெரிய படகைப் பயன்படுத்தி, பின்னர் டிங்கி படகில் சென்றார்களா என்று கேட்டபோது, ​ முதல் பார்வையில், இவ்வளவு நீண்ட பயணத்திற்குப் படகு மிகவும் சிறியதாகத் தெரிகிறது.

இருப்பினும், அவர்கள் வழியில் வேறு சில கப்பலைப் பயன்படுத்தி, பின்னர் இந்த குறிப்பிட்ட படகிற்கு மாற்றப்பட்டனர் என்பது போன்ற தகவல்கள் எதுவும் தற்போது இல்லை, என்று பாண்டே கூறினார்,

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் சென்று, அங்கு ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வந்ததாக அசோக்குமார் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அசோக்குமார் இந்தியா திரும்ப விரும்பிய போது, சில தகராறு காரணமாக அவரது ஸ்பான்சர் பாஸ்போர்ட்டைத் திருப்பித் தரவில்லை.

இதனால் பாஸ்போர்ட் இல்லாமலேயே இந்தியாவுக்குத் திரும்பும் அவல நிலையில் இருந்த அசோக்குமார், ஈரானில் உள்ள டாக்டர் ஹுசைன் உதவியுடன், மஸ்கட்டில் இருந்து ஜாஸ்க் நகருக்கு படகில் ஓமன் வளைகுடாவைக் கடக்க முடிந்தது.

ஜாஸ்கில், டாக்டர் ஹுசைன் மூன்று பேருடன் அசோக்குமாருக்கு ஒரு படகை ஏற்பாடு செய்தார், நால்வரும் இறுதியில் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள குஜராத்தை நோக்கிப் புறப்பட்டனர் என்று காவல்துறை கூறியது.

தங்கள் பயணத்தின் முதல் சில நாட்களுக்கு, அசோக் குமார் சாட்டிலைட் தொலைபேசி மூலம் டாக்டர் ஹுசைனுடன் தொடர்பில் இருந்தார். இதையொட்டி, ஹுசைன் ஆனந்த்குமாரிடம் ஒவ்வொரு மூவ் குறித்தும் அப்டேட் செய்து கொண்டிருந்தார்.

அசோக் இந்திய கடற்கரையை நெருங்கியதும், தனது தம்பியை தொடர்பு கொள்ள முயன்றார், என்று எஸ்பி கூறினார்.

இதையும் படிக்க: பாஸ்போர்ட் இல்லாமல் படகில் பயணம்- இந்தியாவுக்குள் மீண்டும் நுழைய முயன்ற தமிழக இன்ஜினியர் கைது, நடந்தது என்ன?

அசோக் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்த நேரத்தில், மஸ்கட்டில் எலெக்ட்ரிகல் இனஞ்னியராக பணிபுரியும் ஆனந்த்குமார், தனது அண்ணனை அழைப்பதற்காக புதன்கிழமை விமானம் மூலம் ராஜ்கோட் வந்து, பின்னர் சாலை வழியாக ஓகா நகரை அடைந்தார்.

இருப்பினும், அசோக் மற்றும் ஈரான் குழுவினர் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஆனந்த்குமாரையும் போலீசார் கைது செய்தனர். காவல்துறையின் கூற்றுப்படி, அசோக்குமாரை சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் மீண்டும் நுழையச் செய்யும் சதியில் தம்பியும் ஒரு பகுதியாக இருந்தார்.

ஐந்து பேர் மீதும் Foreigners Act, Passport Act and Narcotic Drug and Psychotropic Substances Act ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்தபாவிடம் இருந்து 5.01 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 கிராம் ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து அவர்களிடம் இருந்து ஒரு சாட்டிலைட் போன், 8 செல்போன்கள், இரண்டு லேப்டாப், பீப்பாய், பெட்ரோல் கேன்கள், ஒரு ஜிபிஎஸ் கருவி, 15 ஏடிஎம் கார்டுகள், 2.5 லட்சம் மதிப்பிலான ஈரானிய ரியால்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டன. படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடல் வழி கடத்தல் முயற்சி குஜராத்தில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்கு புதிய சவாலாக உள்ளது என்றார் பாண்டே.

சமீப காலமாக, குஜராத் கடற்கரை வழியாக இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்தும் முயற்சிகள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் தொடர்பான ஓரிரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஆனால் இந்த முறையில் மனிதர்களை கடத்தலாம் என்ற எண்ணம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு சவாலாக உள்ளது, என்று பாண்டே மேலும் கவலை தெரிவித்தார்.

Read in English: Tamil Nadu engineer, four others sent to seven-day police custody

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment