இந்திய பொருளாதாரம் குறித்து ஐ.எம்.எஃப் கணிப்பு... மத்திய அரசை சாடிய சிதம்பரம்!
IMF projections India's economic growth : வீழ்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தால் வங்கிகள் அற்ற நிதித்துறைகள் மற்றும் ஊரக வருமான வளர்ச்சி பெரிதளவில் பாதிக்கப்படும் - கீதா கோபிநாத்
IMF projections India's economic growth : சர்வதேச நாணய நிதியம் எனப்படும் International Monetary Fund அமைப்பின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத். சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1%-ல் இருந்து 4.8% வரை 2019-2020 ஆண்டுகளில் குறையும் என்று கண்டறிந்ததுள்ளது.
Advertisment
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
அதனை அந்த நிதியத்தின் தலைவர் கீதா கோபிநாத் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்த முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ப. சிதம்பரம் அதில் “தற்போது அனைத்து பாஜக அமைச்சர்களும் கீதாவை தாக்க துவங்குவார்கள் பாருங்கள்” என்று கூறியுள்ளார்.
ப. சிதம்பரம் ட்வீட்
”இந்திய அரசு பணமதிப்பிழக்கத்தை அறிவித்த உடனே அதற்கு முதன்முதலாக தன்னுடைய எதிர்ப்பினை தெரிவித்தவர் கீதா. தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து உண்மையை கூறியுள்ளார். நாம் மத்திய அரசு கீதாவை குறித்து வைத்து தாக்கி பேசுவதை கேட்பதற்கு தயார் நிலையில் இருப்போம்” என்று ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
Reality check from IMF. Growth in 2019-20 will be BELOW 5 per cent at 4.8 per cent.
ஐ.எம்.எஃப் அமைப்பின் இந்த கணிப்பானது 4.8% வரை குறையும் என்று கூறுகிறது. ஆனால் இதற்கும் குறைவாக போனாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 2019ம் ஆண்டில் சர்வதேச அளவில் பொருளாதாரமானது 2.9% வரை குறைந்துள்ளது. இந்தியாவில் நடப்பு ஆண்டில் 1.2% வரை பொருளாதார வளர்ச்சி குறைவை கண்டுள்ளது. வளர்ந்து வரும் சந்தை நாடுகளில் பெரிய அளவில் வீழ்ச்சியை கண்டுள்ளது இந்தியா தான். வீழ்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தால் வங்கிகள் அற்ற நிதித்துறைகள் மற்றும் ஊரக வருமான வளர்ச்சி பெரிதளவில் பாதிக்கப்படும் என்று கீதா கோபிநாத் அறிவித்துள்ளார்.