Imran Khan speech: இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கு முன்னர் மீண்டும் ராண்டுவத்தாக்கல் போன்று எதுவும் நடத்தப்படலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சூசகமாக தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது.
அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். அதன் பின்னர் பேச்சுவார்த்தையின் பயனாக அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த ஒருமாதமாக இந்திய பாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இருநாட்டு ராணுவங்களும் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அபிநந்தன் விடுதலையின் போது இருநாடும் போருக்கு தயாரகவில்லை என்று கூறியிருந்தார். சமீபத்தில் பாகிஸ்தான் தனது தேசிய தினத்தை கொண்டாடிய போதும், ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த இம்ரான் கான் இருநாடும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாகவே, தொடர்ந்து இம்ரான் கானி பேச்சு உலகநாடுகளால் உற்று நோக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்திருக்கும் பேட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்ரான் கான் பேட்டியில் கூறியிருப்பதாவது, “ ‘எங்கள் நாட்டில் (பாகிஸ்தான்) . பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை விதித்து அவற்றைச் செயலிழக்கச் செய்து வருகிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரவாதத்தை ஒடுக்கியுள்ளோம்.
“மிஷன் சக்தி” மூலம் புதிய சாதனை படைத்த இந்தியா – மோடி பெருமிதம்
நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை.இந்தியாவில் தேர்தல் முடியும் வரை நம்மை சுற்றியுள்ள நெருக்கடி அப்படியேதான் இருக்கும். இந்தியத் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் எதாவது தாக்குதலில் இந்தியா ஈடுபட வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு செய்திகள் வந்துள்ளன.
இதனை எதிர்கொள்வதற்கு அனைத்து விதங்களிலும் நாம் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.