Liz Mathew, Johnson T A
காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி கர்நாடகாவில் கவிழ்ந்த பிறகு, புதிய அரசை அமைக்க அவசரப்படப் போவதில்லை என்று நேற்று(ஜூலை.24) தனது எண்ணத்தை பாஜக வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இன்று (ஜூலை.25) அல்லது நாளை ராஜ் பவனை அணுகி ஆட்சி அமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக தரப்பில் இருந்து வெளியான தகவலில், ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திப்பதற்கு முன்பாக, பி எஸ் எடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. "இதற்கான பணிகள் இன்று வியாழக்கிழமை மிக துரிதமாக நடைபெறவுள்ளது" என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பதவி விலகிய எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனு குறித்து, உச்ச நீதிமன்றம் எடுக்கவிருந்த முடிவுக்காகவும், அவர்களது ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகரின் நிலைப்பாடு குறித்து அறியும் வரையிலும் காத்திருக்கலாம் என பிஜேபி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலைக்கு பிறகு, கட்சித் தலைவர்கள், சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, ஆளுனரை சந்திப்பது என்று முடிவெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu news today live updates - தமிழகத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
மேலும் ஒரு பாஜக தலைவர் கூறுகையில், கட்சி சபாநாயகரிடமும் பேசி வருவதாக கூறியுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சித் தலைவர் ஒருவர் கூறுகையில், மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா கிளர்ச்சி எல்.எல்.ஏ.க்களை சந்திக்க முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். "கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களில் சிலர் சித்தராமையாவுக்கு விசுவாசமாக இருப்பவர்கள். ஆகையால், என்ன நடக்கப் போகிறது என்பதை எங்களால் கூற முடியாது" என்றார்.
மேலும் அந்த மூத்த பாஜக தலைவர் கூறுகையில், "அரசாங்கத்தை அமைக்க நாங்கள் அவசரப்படவில்லை. அரசை அமைப்பதற்கு முன், தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகள் இருக்கிறது. அப்போது தான் நிலையான ஆட்சியை அமைக்க முடியும். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்"
எங்கள் முடிவுகளில் குழப்பமோ, தெளிவற்ற நிலையிலேயோ நாங்கள் இல்லை என்பதை முதலில் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். தலைமைக்கு யார் வர வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும் வரை, மாநில சட்டமன்றத்தை கலைக்க பாஜக எண்ணவில்லை, குடியரசுத் தலைவர் ஆட்சியையும் அமையப் போவதில்லை. அதேசமயம், எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கொருவார்ல் ஆட்சியையும் அமைப்பார்" என்று தெரிவித்திருக்கிறார்.