Advertisment

Tamil Nadu news updates : தமிழகத்திற்கு கூடுதலாக 5 நாட்களுக்கு தண்ணீர் - கர்நாடகாவிற்கு உத்தரவு

Chennai Petrol Diesel Price Today : சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 76.18 ஆகும். டீசல் விலை ரூ. 69.60 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates :  பொதுவாக தென்மேற்கு பருவமழை காலங்களில் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடற்கரையோர மாவட்டங்களுக்கு அதிக அளவு மழை பொழிவு கிடைக்காது. ஆனால் இம்முறை சென்னையில் பருவமழை வெளுத்து வாங்குகிறது என்று தான் கூற வேண்டும். குறிப்பாக கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக இரவு துவங்கி விடிய காலை வரை நல்ல கனமழை பெய்து வருகிறது. இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிப்படைந்தாலும் கூட, இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் சென்னையின் நீர் ஆதார மையங்களாக விளங்கும் பல்வேறு நீர்பிடிப்பு பகுதிகளில் சிறிதளவு கூட நீர் சேகாரம் ஆகவில்லை. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

Advertisment

சென்னை மற்றும் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் ஆங்கிலத்தில் படித்து தெரிந்து கொள்ள : Chennai, Tamil Nadu News Live Updates

தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிகாலம் நிறைவு

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருக்கும் தமிழக எம்.பி.க்களான கே.ஆர். அர்ஜூனன், வி. மைத்ரேயன், ஆர். லட்சுமணன், டி.ராஜா, கனிமொழி, மற்றும் டி. ரடத்தினவேல் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. நேற்று மைத்ரேயன் உருக்கத்துடன் பிரியாவிடை பெற்றார். கனிமொழி அவர்கள் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, athi varadar, Petrol Diesel Price: தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    20:47 (IST)25 Jul 2019

    தமிழகத்திற்கு கூடுதலாக 5 நாட்களுக்கு தண்ணீர் – கர்நாடகாவிற்கு உத்தரவு

    கர்நாடக அணைகளில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு  உத்தரவிட்டுள்ளது. நீர்வரத்து குறைவாக இருப்பினும் கிருஷ்ணராஜ சாகர், கபினியில் இருந்து நீர்திறக்க உத்தரவு  இடப்பட்டுள்ளதாக, டில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குபின் காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

    20:17 (IST)25 Jul 2019

    நடிகர்கள் ரஜினியும், சூர்யாவும் மிரட்டப்படுகின்றனர் - மக்களவையில் மதுரை எம்.பி. வெங்கடேசன் பேச்சு

    புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சூர்யாவும், அவரை ஆதரித்த ரஜினியும் மிரட்டப்படுகிறார்கள். மக்களவையில் நடிகர் சூர்யா கருத்துக்கு ஆதரவாக சு.வெங்கடேசன் பேசியுள்ளார்.

    20:08 (IST)25 Jul 2019

    அத்திவரதர் - கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகவில்லை - தமிழக அரசு

    ஜூலை 24ம் தேதிவரை 34 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளதாகவும், நெரிசலில் சிக்கியதால் ஆறு பேர் பலியாகவில்லை என்றும் தெரிவித்தார். தரிசனத்தை முடித்து விட்டு திரும்பிய போது உடல்நலக் குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக அவர்கள் இறந்ததாகவும், அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

    19:30 (IST)25 Jul 2019

    வேலூர் மக்களவை தேர்தல் – 27ம் தேதி முதல் ஸ்டாலின் பிரசாரம்

    வேலூர் மக்களவை தேர்தலையொட்டி வரும் 27ஆம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.* திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து சட்டமன்ற தொகுதி வாரியாக ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

    18:23 (IST)25 Jul 2019

    நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆகஸ்ட் 7 வரை நீட்டிப்பு

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகார குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  நாளையுடன் கூட்டத் தொடர் முடிவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 8 நாட்களுக்கு கூட்டத் தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    18:06 (IST)25 Jul 2019

    'அகலாதே'... ரிலீசானது நேர்கொண்ட பார்வை பாடல் வீடியோ

    நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே பாடல் வெளியானது.. வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜித் - வித்யாபாலன் காம்போவில் உருவாகியிருக்கும் அகலாதே பாடலை ஜீ மியூசிக் ( ZEE Music South) தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது

    17:31 (IST)25 Jul 2019

    ஜூலை 30 : மருத்துவமனை தினம் - சுகாதாரத்துறை உத்தரவு

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளான ஜூலை 30-ம் தேதியை, மருத்துவமனை தினமாக கொண்டாட சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  வரும் 30-ம் தேதி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவமனை தினத்தை கொண்டாட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    17:08 (IST)25 Jul 2019

    வேலூர் மக்களவை தேர்தல் – முதல்வர் பழனிசாமி மூன்று நாட்கள் பிரசாரம்

    வேலூர் மக்களவை தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

    அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

    முதல்வரின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 27-ல் மாலை 5 மணிக்கு வாணியம்பாடி, மாலை 6 மணிக்கு ஆம்பூரில் பிரசாரம்

    28-ல் மாலை 5 மணிக்கு கே.வி.குப்பம், மாலை 6 மணிக்கு குடியாத்தத்தில் பிரசாரம்

    ஆக.2-ல் மாலை 5 மணிக்கு அணைக்கட்டு, மாலை 6 மணிக்கு வேலூரில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    16:43 (IST)25 Jul 2019

    மாணவர்களுக்கு நூதன தண்டனை!

    ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய பச்சையப்பன்,புதுகல்லூரி மற்றும் மாநில கல்லூரிகளை சேர்ந்த 90 மாணவர்களை கண்டறிந்து கல்லூரி முடிந்த பின்பு தினந்தோறும் 2 மணி நேரம் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை சீர்செய்ய உதவ வேண்டும் என அந்த மாணவர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் A.K. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    16:34 (IST)25 Jul 2019

    அத்தி வரதர் தரிசன வழக்கு!

    அத்திவரதர் தரிசனம் தொடர்பான வழக்குகளில் வரும்  திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மத்திய துணை ராணுவ பாதுகாப்பு, வரதராஜர் சன்னதி திறப்பு, உயிரிழந்தவர்களுக்கு ரூ15 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட 5 வழக்குகளின் தீர்ப்பு வரும் திங்கட்கிழமை  வெளியாகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்குகள் மீதான விசாரணை   நீதிமன்றத்தில் நடைப்பெற்ற போது மருத்துவம், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது - என தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.  மேலும்  அத்திவரதர் தரிசனத்தின் போது, நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழக்கவில்லை என்றும் தரிசனம் முடித்து திரும்பும் போது தான் முதியவர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. 

    15:58 (IST)25 Jul 2019

    பிக் பாஸ் மீரா மிதுன்!

    தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுனிடம், நிகழ்ச்சி நடைபெறும் ஈவிபி பிலிம் சிட்டியில் எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  'மிஸ் தமிழ்நாடு 2019’ என்ற நிகழ்ச்சி நடத்தப்போவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப்  மீரா மிதுன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    15:44 (IST)25 Jul 2019

    அணை பாதுகாப்பு மசோதா!

    அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழகம், கேரளா தவிர மற்ற மாநிலங்கள் ஆதரவை வழங்கியுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.  *மக்களவையில் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள் சில எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    15:42 (IST)25 Jul 2019

    ஸ்டாலின் வாழ்த்து!

    பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளளுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்  வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    15:40 (IST)25 Jul 2019

    கனிமொழி பேச்சு!

    முத்தலாக் சட்டத்தை திமுக ஏன் எதிர்கிறது என்பதை எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில் விளக்கினார். குறிப்பிட்ட சமுதாயம் மற்றும் மதத்தை குறி வைத்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த முத்தலாக் தடை சட்டத்தை திமுக எதிர்க்கிறது . மேலும்  கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இந்த சிவில் விவகாரத்தை கிரிமினல் குற்றமாக எப்படி கருத முடியும்? - எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

    14:47 (IST)25 Jul 2019

    மைத்ரேயன் பேட்டி!

    சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் iஇன்றுஅஞ்சலி செலுத்தினார். மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நேற்றுடன்  மைத்ரேயன் ஓய்வு பெற்ற நிலையில்  சென்னை திரும்பிய உடனே ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது, தமக்கு வருத்தம் அளிப்பதாக கூறியினார். 

    14:43 (IST)25 Jul 2019

    துணை முதல்வர் வாழ்த்து!

    ராமதாஸூக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    14:42 (IST)25 Jul 2019

    பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள்!

    பாமக நிறுவனர் ராமதாஸ் தனது 80 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவரது மகனும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார்.

    13:56 (IST)25 Jul 2019

    வைகோவுக்கு வைரமுத்து வாழ்த்து!

    மைத்ரேயன், டி.ராஜா உள்ளிட்ட 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் இருந்து 6 புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக சார்பாக சந்திர சேகர், முகமது ஜான், பாமக சார்பாக அன்புமணி ராமதாஸ், திமுக சார்பாக சண்முகம், வில்சன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் புதிய எம்பிக்களாக போட்டியின்றி தேர்வாகினர். இந்நிலையில் வைகோவுக்கு ;சிறுத்தைபோல் நடந்து சென்றாய், செம்மொழியில் உறுதி பூண்டாய் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    13:53 (IST)25 Jul 2019

    வீரமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

    திராவிட கழக தலைவர் கி.வீரமணியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். வீரமணி இல்லத்துக்கு சென்ற ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், ஆகஸ்ட் 7ம் தேதியன்று நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற வருமாறு வீரமணிக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

    13:51 (IST)25 Jul 2019

    90 ரூட் தலைகள்!

    சென்னையில் 3 கல்லூரிகளில் 90 'ரூட் தல' மாணவர்களை போலீசார் அடையாளம் கண்டு பிடித்துள்ளனர். இந்த 90 மாணவர்களுடன்​ வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடத்த போலீசார் முடிவு  செய்துள்ளனர். மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    12:55 (IST)25 Jul 2019

    ராணுவ பயிற்சி முகாமில் தோனி

    ஜூலை 31ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை 106வது பிராந்திய பட்டாலியனில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஈடுபட உள்ளார். (கௌரவ) லெப்டினன்ட் கேணலாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளார்.

    12:48 (IST)25 Jul 2019

    பெங்களூருவில் காங்கிரஸ் தலைவரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்ட குமாரசாமி

    23ம் தேதி ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் பெங்களூருவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ சௌமியா ரெட்டியும் பங்கேறிருந்தார்.  பாஜகவினர் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். 

    12:21 (IST)25 Jul 2019

    அத்தி வரதரை தரிசனம் செய்த மோகன் பகவத்

    அத்திவரதரை தரிசனம் செய்ய தினமும் நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் தலைவர்கள், இயக்கத் தலைவர்கள், தாதாக்கள் என பலரும் வந்து தரிசனம் செய்து காஞ்சியை 25 நாட்களாக கோலகலாமாக வைத்திருக்கின்றனர். இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளார்.

    12:01 (IST)25 Jul 2019

    இந்திய கடற்படைக்கு ஹெலிகாப்டர்கள் : ரூ. 17 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்

    இந்திய கடற்படைக்கு எம்.எச். ரக ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்காவுடன் ரூ. 17 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளதாக கடற்படை தளபதி கரண்பீர் சிங் அறிவிப்பு. 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 24 மல்ட்டி ரோல் ஹெலிகாப்டர்கள் இந்த வருட இறுதிக்குள் வாங்க அனைத்துவிதமான ஒப்பந்தங்களும் முடிவாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

    11:47 (IST)25 Jul 2019

    கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் பாஜக : டெல்லியில் முக்கிய ஆலோசனை

    கர்நாடகாவில் 23ம் தேதி இரவு, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்று குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்று எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில் அமித்ஷாவுடன் கர்நாடக மாநில பாஜக நிர்வாகிகள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட கோரி, கர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    11:16 (IST)25 Jul 2019

    மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்ட தமிழக எம்.பிக்கள்

    மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக சார்பில் சண்முகம், வில்சன், மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பதவி ஏற்றுக் கொண்டனர். அதிமுக சார்பில் முகமது ஜான் மற்றும் சந்திரசேகர் ஆகியோரும் தற்போது பதவி ஏற்றுக் கொண்டனர்.

    11:07 (IST)25 Jul 2019

    பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் - முதல்வர் வாழ்த்து

    பாமக நிறுவனர் ராமதாஸூக்கு இன்று பிறந்தநாள். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலைபேசியில் அழைத்து தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அதில் நீண்ட உடல் ஆரோக்கியத்துடன் பொதுவாழ்வில் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    11:04 (IST)25 Jul 2019

    ஆந்திரா மற்றும் தமிழகத்தில் வருமான வரியினர் சோதனை

    தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 35 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலையில் இருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    10:57 (IST)25 Jul 2019

    மேயர் கொலை : பணிப்பெண் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி

    திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் கொலை செய்யப்பட்டடார் திருநெல்வேலியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி. அவருடன் அவருடைய கணவரும், வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மாரியம்மாள் என்ற பணிப்பெண்ணும் கொல்லப்பட்டார். திமுக சார்பில் கொலைசெய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தது திமுக.

    10:12 (IST)25 Jul 2019

    Nalini Parole : நளினி பரோல்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, 28 வருட சிறை வாசத்திற்கு பிறகு முதன்முறையாக 1 மாத பரோலில் வெளியே வந்துள்ளார். ஊடகங்களிடம்  பேசக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இந்த பரோல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வேலூரில் இருக்கும் சத்துவாச்சாரிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளார் நளினி. தன் மகளின் திருமணத்திற்காக 6 மாத பரோல் கேட்டது குறிப்பிடத்தக்கது. 

    வழக்கின் பின்னணியும் பரோலிற்கான முழுமையான காரணங்களையும் தெரிந்து கொள்ள 

    10:03 (IST)25 Jul 2019

    லாபம் சம்பாதிக்கும் இஸ்ரோ

    விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமான மைல் கல்லை அடைந்திருக்கும் இஸ்ரோ நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் 6289 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இஸ்ரோ சார்பில் வணிக ரீதியாக வருமாய் ஈட்டப்பட்டதா என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதம அலுவலக் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இதனை அறிவித்துள்ளார்.

    09:34 (IST)25 Jul 2019

    சென்னை பம்மல் சிண்டிகேட் வங்கி - 1 வாரம் மூடப்படுகிறது

    சென்னை அடுத்து உள்ள பம்மல் பகுதியில் அமைந்திருக்கும் சிண்டிகேட் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அடுத்த ஒரு வாரத்திற்கு அங்கு வங்கி இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் பல்லாவரம் கிளையை அணுகலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    09:31 (IST)25 Jul 2019

    Cauvery Management Board Meeting

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டும். ஜூன் மாதம் முதல் நீர் திறக்கும் காலம் என்பதால் முதல் கூட்டம் மே மாதம் துவங்கியது. இரண்டாவது கூட்டம் ஜூனிலும் நடைபெற்றாது. ஆனால் இந்த இரண்டு காலங்களிலும் காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவுகள் படி கர்நாடக அரசு நீர் திறக்கவில்லை. இந்நிலையில் இன்று 3வது கூட்டம் நடைபெற உள்ளது.

    09:10 (IST)25 Jul 2019

    BVSC Counselling : இன்று துவங்குகிறது கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இன்று கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று முதல் நடைபெற உள்ளது. இதற்காக ஆன்லைனில் விண்ணபிக்க கடந்த மாதம் 16ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. தரவரிசை பட்டியல் 3ம் தேதி வெளியான நிலையில் இந்த கல்வியாண்டிற்கான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    Tamil Nadu news today live updates : பச்சையப்பா கல்லூரி விவகாரம்

    பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் கையில் கத்தியுடன் பட்டப்பகலில் அரும்பாக்கம் பகுதியில் சுற்றித்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து இரண்டு கல்லூரி மாணவர்கள் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கு முறையாக கவுன்சிலிங் அளிக்க விரும்புவதாக கல்லூரி முதல்வர் அருள் மொழி செல்வன் அறிவித்துள்ளார்.

    ரூட் தல என்றால் என்ன? 

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அத்தி வரதருக்கான 48 நாட்கள் உற்சவத்தில் இன்று 25வது நாளாகும். இன்று மாம்பழ நிற மஞ்சள் பட்டாடையில் அத்திவரதர் காட்சி அளிக்கிறார். அங்கு வந்து குவியும் பக்தர்களுக்கு நீர் மோர் அளிக்க ஆவின் முன் வந்துள்ளது.

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment