Advertisment

மத்திய பட்ஜெட் 2020-21: வருமான வரி சலுகை பெற, கைவிட வேண்டிய விலக்குகள் என்னென்ன?

Income Tax Slabs & Tax Rate FY 2020-21 :

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
income tax slab, income tax slab budget 2020

income tax slab, income tax slab budget 2020

இன்று மத்திய பட்ஜெட்டில் மாத சம்பளம் வாங்கும் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தனிநபர் வருமான வரிகளில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு  :

  •  ஆண்டுக்கு ரூ.5 முதல் ரூ. 7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களின் வருமான வரி தற்போது  10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு,  இந்த வரி விகிதம்  20 சதவீதமாக இருந்தது.
  •  ஆண்டுக்கு ரூ. 7.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களின் வருமான வரி தற்போது 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு,  இந்த வரி விகிதம்  20 சதவீதமாக இருந்தது.
  •  ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ. 12.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களின் வருமான வரி தற்போது  20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு, இந்த வரிவிகிதம்  30 சதவீதமாக இருந்தது.
  •  ஆண்டுக்கு ரூ. 12.5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களின் வரி விகிதம் 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.முன்பு, இந்த வரிவிகிதம்  30 சதவீதமாக இருந்தது.
  •  புதிய வரி விதிப்படி, ஆண்டுக்கு ரூ.15 லட்சத்திற்கும் மேல் வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீத வருமான வரி விதிக்கப்படும்.

மேலும் படிக்க: மத்திய பட்ஜெட் 2020-21 சிறப்பு நேரலை

பட்ஜெட் உரையில் திருக்குறள், ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்!

2020-21 ஆண்டிற்கான புதிய வருமான வரி விகிதங்கள் 2021-22

  1. புதிய வருமான வரி விகிதம்: ரூ .5 முதல் ரூ .7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரி
  2.  புதிய வருமான வரி விகிதம்: 7.5 லட்சத்துக்கும் 10 லட்சத்துக்கும் இடையிலான வருமானத்திற்கு 15% வரி
  3.  புதிய வருமான வரி விகிதம்: 10 லட்சத்துக்கும் 12.5 லட்சத்துக்கும் இடையிலான வருமானத்திற்கு 20% வரி
  4. புதிய வருமான வரி விகிதம்: 12.5 லட்சத்துக்கும் 15 லட்சத்துக்கும் இடையிலான வருமானத்திற்கு 25% வரி
  5. புதிய வருமான வரி விகிதம்: 15 லட்சத்திற்கு மேல் வருமானத்திற்கு 30% வரி

வருமான வரியில் அளிக்கப்படும் விலக்குகளை கைவிடும் நபர்களுக்கு மட்டுமே புதிய வருமான வரி விகிதம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ள சலுகைகளை பெற நீங்கள் கைவிடவேண்டிய விலக்குகள் என்னென்ன ?

இங்கே ஒரு விரிவான பட்டியல்:

இன்று மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு 115BAC இன் கீழ் வரிவிதிப்பை தேர்ந்தெடுக்கும் நபர்கள் (அ) HUF பின்வரும் விலக்குகள் / பிடித்தலுக்கு உரிமை பெற மாட்டார்கள்:

* பிரிவு 10 இன் பிரிவு (5) இல் சொல்லப்பட்டிருக்கும் பயண சலுகைகள் ;

* பிரிவு 10 இன் பிரிவு (13 ஏ) இல் உள்ள வீட்டு வாடகை சலுகை ;

* பிரிவு 16 இல் உள்ளபடி நிலையான விலக்கு, பொழுதுபோக்கு சலுகை வேலைவாய்ப்பு / தொழில்முறை வரி ஆகியவற்றிற்கான கழித்தல்;

பிரிவு 23 இன் துணைப்பிரிவு (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள சுய ஆக்கிரமிப்பு அல்லது காலியான சொத்து தொடர்பாக பிரிவு 24 இன் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் வட்டி.

* பிரிவு 35AD (அ) பிரிவு 35CCC இன் கீழ் பெறப்படும் கழித்தல்  ;

* பிரிவு VIA  கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் கழித்தல் (பிரிவு 80சி, 80 சிசி, 80 சிசிடி, 80 டி, 80 டிடி, 80 டிடிபி, 80 இ, 80 இஇ, 80 இஇஏ, 80 இஇபி, 80 ஜி, 80 ஜிஜி, 80 ஜிஜிஏ, 80 ஜிஜிசி, 80 ஐஏபி, 80-ஐஏபி, 80-ஐஏசி, 80-ஐபி , 80-ஐபிஏ போன்றவை).

எவ்வாறாயினும், பிரிவு 80 சி.சி.டி (அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் பணியாளரின் கணக்கில் முதலாளியின் பங்களிப்பு) மற்றும் பிரிவு 80 ஜே.ஜே.ஏ.ஏ (புதிய வேலைவாய்ப்பு) ஆகியவற்றின் துணைப்பிரிவு (2) இன் கீழ் கழித்தல் கோரப்படலாம்.

பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால், நுகர்வோர் செலவினங்களை அதிகரிப்பதற்கும்,  உள்நாட்டு பொருட்களின் நுகர்வு அதிகரிப்பதற்கும்,  அரசாங்கம் சம்பள வர்க்கத்திற்கான வரி விகிதங்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Income Tax
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment