india china border news, india china border tension, indian soldiers in chinese custody, india soldiers captured, indian soldiers return from chinese custody, இந்தியா, சீனா, இந்திய ராணுவ வீரர்கள், galwan valley, galwan faceoff
இந்தியா - சீனா இடையே நடந்த ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதனையடுத்து, லடாக்கில் நடந்த மோதலை தொடர்ந்து பிடித்து செல்லப்பட்ட 10 இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்தது.
Advertisment
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு, இந்திய வீரர்களை சீன வீரர்கள் கடுமையாக தாக்கினர். இதனால், இரு தரப்புக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சிலர் காயமடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. மோதலின் போது இந்திய வீரர்களை சீன ராணுவம் பிடித்து சென்றதாக தகவல் வெளியானது. இதனை சீனா மறுத்திருந்தது.
எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இருதரப்பும் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி மோதல் நடந்த மறுநாளான 16-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவ மேஜர் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது.
இதில் அன்று முடிவு எட்டப்படாததால், 2-வது நாளாக நேற்று முன்தினமும் நீடித்தது. இரு தரப்புக்கும் இடையே கடந்த 6-ம் தேதி எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவு அடிப்படையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை விலக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தை 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இரு நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (ஜூன்.19) நடைபெறுகிறது.
இந்நிலையில், தொடர் பேச்சுவார்த்தையின் பலனாக, 4 ராணுவ உயரதிகாரிகள் உட்பட 10 இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நேற்று (ஜூன்.18) அறிக்கை வெளியிட்ட இந்திய ராணுவம், லடாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று விளக்கம் அளித்திருந்த நிலையில், இப்போது 10 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
1962-ம் ஆண்டு சீன-இந்தியா போருக்குப் பின்னர் இந்திய வீரர்கள் சீனத் தரப்பினரால் கைது செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil