நிஜாமுதீன் மாநாடு: மத்திய உள்துறை முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன?

மார்ச் 17ம் தேதி தெலுங்கானாவில் தொடர்பு கண்டறியப்பட்டாலும், 21 அன்று தான் ஜமாஅத் தொடர்புடைய 800க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

புதுடில்லியில் நிஜாமுதீன் பகுதியில் தப்லீஹி ஜமாஅத் அமைப்பு நடத்திய கூட்டத்திற்கும், கோவிட் -19 வைரஸ் பரவலுக்கும் இடையேயான தொடர்பு முதன் முதலாக மார்ச்-17 அன்று தெலுங்கானா மாநிலத்தில் கண்டறியப்பட்டது.  இருப்பினும், மார்ச் 21-ம் தேதிதான்  தப்லீஹி ஜமாஅத் மாநாடுடன் தொடர்புடைய 800 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவிக்கையில” தெலுங்கானா மாநிலத்தில் தப்லிக் ஜமாத் தொடர்புடைய இந்தோனேசியருக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்த  தகவல், மார்ச் 18-ம் தேதி எங்களுக்கு பகிரப்பட்டது. அடுத்த நாளே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாலிகி ஜமாஅத்துடன் தொடர்புடைய வெளிநாட்டினர் குறித்த முழுமையான விவரங்களை உளவுத்துறை அமைப்பும், உள்துறை அமைச்சகமும் தயாரிக்க தொடங்கியது”என்று  தெரிவித்தார்.

மார்ச் 21-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 1,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்கள் தங்கியிருப்பதாகவும்,    அதில், 216 பேர் கொரோனா வைரஸ் பரவலின் மையமாகக் கருதப்படும் டெல்லி நிஜாமுதீன்பகுதியில் தங்கியிருப்பதாகவும் உள்துறைதுறை அமைச்சகத்தின்  ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

கூடுதலாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 824 வெளிநாட்டினர் மதமாற்ற நடவடிக்கைகளில் மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு, வைரஸ் தொற்று சோதனை செய்வதற்காக இந்த 824 பேரின் விவரங்கள் அனைத்தும், அந்தந்த மாநில  காவல்துறையினருடன் பகிர்ந்துக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது

மேலும், மார்ச் 21ம் தேதி நிலவரப்படி, ஹஸ்ரத் நிஜாமுதீன் மார்க்கஸில் மட்டும் 1,746 பேர் தங்கியுள்ளனர். மார்ச் 18 முதல் 21 வரை இவர்களுக்கு மருத்துவ சோதனை செய்வதற்கோ  (அ) அந்த இடத்தில் இருந்து அவர்களை  அப்புறப்படுத்துவதற்கோ என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

//tamil.indianexpress.com/explained/what-is-tablighi-jamaat-movement-aalmi-ijtama-nizamuddin-faction-180994/

டெல்லி அரசு, கடந்த மார்ச் 13ம் தேதி முதலில் இருந்து,  விளையாட்டு, கருத்தரங்ம் போன்ற எந்த செயலுக்கும் ஒரே இடத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கூடக்குடாது என்ற தடை  உத்தரவை பிறப்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமாக, நிஜாமுதீன் மார்க்கஸ் பகுதியில் உள்ளவர்களுக்கு மார்ச் 26ம் தேதி தான் மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்தது. மார்ச் 25ம் தேதி ,  தெலுங்கானாவில் ஜமாஅத் அமைப்போடு தொடர்புடைய ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைசகத்தின் கூற்றுப்படி,” இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை, கிரகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள தப்லீஹி ஜமாஅத் உறுப்பினர்கள் மதமாற்ற நடவடிக்கைகளுக்காக  இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். அவர்கள் பொதுவாக நிஜாமுதீனில் உள்ள தப்லீ மார்க்கசை தங்கள் வருகை முகவரியாக பதிவு செய்துவிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பின்னர் விரைகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் ஒருங்கிணைப்பாளர் மூலம்  தப்லிக்- ஈ- ஜமாஅத் அமைப்போடு தொடர்புடைய உள்ளூர் வேலையாட்களின் பெயர்களை சேகரிக்கவும், அடையாளம் கண்டறிந்து தனிமைப்படுத்தவும், மருத்துவ நீதியாக சோதனை செய்யவும்  மாநில காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் மார்ச் 28ம் தேதி அறிவுறுத்தியது. இதுவரை, இதுபோன்ற 2,137 நபர்கள் வெவ்வேறு மாநிலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிஜாமுதீன் பகுதியில் மட்டும் இதுவரை 1,203 தப்லிக்- ஈ- ஜமாஅத் அமைப்பு வேலையாட்கள் மருத்துவ ரீதியாக திரையிடப்பட்டுள்ளனர். அவர்களில், 303க்கும் அதிகமான பேருக்கு வைரஸ் தொற்றின் அறிகுறிகள் இருப்பதால்,  டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தப்லிக்- ஈ- ஜமாஅத் அமைப்பு தொடர்பான நடவடிக்கைக்காக, இந்தாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், சுமார் 2,100 வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. மார்ச்.24 தேதி அறிவிக்கப்பட்ட தேசிய எல்லைப் பூட்டு நடவடிக்கைக்கு முன்பாக பலர் வெளியேறியதாகவும், 1,000 க்கும் குறைவான மக்கள் தற்போது, இந்தியாவில் தங்கியிப்பதாகவும் கூறப்படுகிறது.

பிப்ரவரி 1 முதல் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்த சர்வதேச பயணிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் குடிவரவு பணியகம் மாநில அதிகாரிகளுடன் பரிந்துக் கொண்டு வருவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, மார்ச் 6 முதல், நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தரையிறங்கிய அனைத்து சர்வதேச வருகைகள் (இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள்) பற்றிய விவரங்களையும் குடிவரவு பணியகம் பகிர்ந்து கொண்டிருக்கிறது… ”என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில், மார்ச் 21 ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் (125)  உத்தரப்பிரதேசம் (132), ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா (தலா 115), தெலுங்கானா (82) என்ற கணக்கில் ஜமாஅத் அமைப்பு தொடர்புடைய வெளிநாட்டினர் தங்கியுள்ளதாக கூற்றபப்டுகிறது.

உள்துறை செயலாளர் அஜய் பல்லா கூறுகையில், “சமீபத்தில் சுற்றுலா விசா மூலமாக இந்தியாவிற்குள் வந்து , நிபந்தனைகளை மீறிய அனைவர் மீதும் சட்டரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  தடுப்புப்பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையும் இதில் அடங்கும்,” என்று தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close