Indian Surgical Strike on Pakistan Live Updates : புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் காஃபூர் “இந்தியாவின் போர் விமானம் முசாஃபர்பாத் பகுதியில் அனுமதியின்றி உள்ளே நுழைந்து, பாலக்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தானின் துரித செயல்பாட்டினால் அங்கிருந்து விரைவாக வெளியேறியதாகவும்” குற்றசாட்டினை முன்வைத்தார்.
இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இந்தியா இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
Indian Airforce cross LOC Claims Pakistan live updates
07:30 PM - விமானப்படையினர் தாக்குதல் நடத்தியது குறித்து விவாதிக்க, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவில் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆதரவு எப்போதும் இருக்கும்; விமானப்படையின் நடவடிக்கையை பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.
04:30 PM : பஞ்சாப் மாநிலத்தில் அதிகபட்ச எச்சரிக்கை
பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், தீவிரவாதிகளின் இருப்பிடம் அழிக்கப்பட்டது. இந்நிலையில், தாக்குதலை அடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவின் படி கடும் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
03:10 PM : அழிப்பதற்கு முன் எடுக்கப்பட்ட தீவிரவாதிகளின் முகாம்
குண்டு வீசி அழிப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட, பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்களுடைய படங்கள் வெளியிடப்பட்டுள்ளது
Intel Sources: Picture of JeM facility destroyed by Indian Ar Force strikes in Balakot, Pakistan pic.twitter.com/th1JWbVrHw
— ANI (@ANI) 26 February 2019
02:15 PM : நாட்டை எதுக்காகவும் விட்டு கொடுக்கமாட்டேன்
ராஜஸ்தானில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, "நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நமது பாதுகாப்பு படையினரே காரணம். நாட்டை எதுக்காகவும் விட்டு கொடுக்கமாட்டேன். பயங்கரவாத முகாம்களை அழித்த விமானப்படை வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று நான் நிச்சயமாக மக்களிடம் கூறுவேன். நாட்டிற்கு எதிரான எந்த செயலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
01:30 PM : அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு
தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் அழைத்துள்ளார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
12:00 PM : மம்தா பானர்ஜீ வாழ்த்துகள்
மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜீ, இந்த தாக்குதலுக்கு தன்னுடைய வாழ்த்துகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
IAF also means India's Amazing Fighters. Jai Hind
— Mamata Banerjee (@MamataOfficial) 26 February 2019
11:30 AM : ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் பெருவாரியான பயிற்சியாளர்கள் இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஃபாரீன் செக்கரட்டரி கோகலே தெரிவித்துள்ளார். இன்று தாக்குதலுக்கு உள்ளான பகுதி, மசூத் அசாரின் மைத்துனர் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியாகும்.
10:25 AM உயர்மட்டக் குழு ஆலோசனையில் மோடி
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் இதர அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார்.
10:10 AM : முதல் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட மத்திய அமைச்சர்
இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதல் குறித்த முதல் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார் மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் கஜேந்திர சேகாவத். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படம் இன்றைய தாக்குதலின் போது எடுக்கபட்டதா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
ये मोदी का हिंदुस्तान है, घर में घुसेगा भी और मारेगा भी,
Air Force carried out aerial strike early morning today at terror camps across the LoC and Completely destroyed it
एक एक क़तरा ख़ून का हिसाब होगा !ये तो एक शुरुआत है .. ये देश नहीं झुकने दूंगा...#Balakot #Surgicalstrike2 pic.twitter.com/fqYJgWxuqX
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) 26 February 2019
09:40 AM : ராகுல் காந்தி ட்வீட்
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று நிகழ்த்தப்பட்ட ராணுவ தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படை பைலட்டுகளுக்கு சல்யூட் செய்துள்ளார்.
???????? I salute the pilots of the IAF. ????????
— Rahul Gandhi (@RahulGandhi) 26 February 2019
09:30 AM : தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை ட்வீட் செய்த பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்
பாகிஸ்தானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் தற்போது மீண்டும் ஒரு ட்வீட் செய்துள்ளார்
Payload of hastily escaping Indian aircrafts fell in open. pic.twitter.com/8drYtNGMsm
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) 26 February 2019
09:20 AM : 1000 கிலோ வெடி மருந்து கொண்டு தாக்குதல்
மிரேஜ் 2000 என்ற போர் விமானங்கள் 12ன் மூலம் இந்த தாக்குதலை இந்தியா இன்று அதிகாலை 03:30 மணி அளவில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 1000 கிலோ எடை கொண்டுள்ள வெடி பொருட்களை எல்லைப் பகுதியில் அமைந்திருந்த தீவிரவாத முகாமை தாக்கி அளித்துள்ளாதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. இந்த செய்தியை இன்னும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் உறுதி செய்யவில்லை.
09:00 AM : பாலகோட் எங்கே உள்ளது ?
காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு தெற்கே 28 கி.மீ தொலைவிலும், ஸ்ரீநகருக்கு 93 கி.மீ தொலைவிலும் பாலக்கோட் அமைந்திருக்கிறது.
08:30 AM : புல்வாமா தாக்குதல்
பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரில் இருந்து ஜம்மு நோக்கி விரைந்து கொண்டிருந்த ராணுவ வீரர்களின் பேருந்து மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.
மேலும் படிக்க : பிரச்னையை பேசி தீர்க்க இந்தியா தயாரா? – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.