நோயாளிகளை இடமாற்ற இந்திய கப்பற் படையின் சிறப்பான படைப்பு… யாருக்கும் நோய் பரவாது!

காடுகள், மலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாமல் இருக்கும் ஊர்களில் இருக்கும் நோயாளிகளை பாதுகாக்கவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

By: Updated: April 14, 2020, 03:39:14 PM

Indian Navy designs air pod for safe evacuation of Covid-19 patients from remote locations : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை காப்பாற்ற இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு ராணுவ வீரன் போன்று மிகவும் துணிச்சலுடன் கொரோனாவில் இருந்து நாட்டை காக்க போராடி வருகின்றனர்.  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டு செல்வதற்கு இந்திய கப்பற்படை புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளது.

மேலும் படிக்க : அரசிடம் பணமும் உணவும் உள்ளது… ஏழைகளுக்கு தரும் மனம் தான் இல்லை – சிதம்பரம் ட்வீட்

நோயாளிகளை அழைத்துச் செல்லும் சாதாரண ஸ்ட்ரெச்சரில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. காடுகள், மலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாமல் இருக்கும் ஊர்களில் இருக்கும் நோயாளிகளை பாதுகாக்க இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ”பாட்” அலுமினியம், நைட்ரைல் ரப்பர், பெர்ஸ்பெக்ஸ் ஆகியவை கொண்உ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 32 கிலோ. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு, கொரோனா நோய் தொற்று ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் Advanced Light Helicopter-ல் வைத்து ஏப்ரல் 8ம் தேதி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

இதற்காக விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் இவ்வகை உபகரணங்களின் விலையில் இருந்து மிகவும் குறைக்கப்பட்டு ரூ. 50 ஆயிரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று மொத்தமாக 12 ஸ்ரெச்சர்கள் உருவாக்கப்பட்டு நாட்டில் உள்ள முக்கிய நேவி கமேண்ட்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Indian navy designs air pod for safe evacuation of covid 19 patients from remote locations

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X