Indian Paramilitary personnel donated Rs. 116 crore to PM CARES fund
Indian Paramilitary personnel donated Rs. 116 crore to PM CARES fund : கொரோனாவால் உலக நாடுகள் திண்டாடி வருகிறது. இந்த நிலையில் இருந்து மேல் எழுந்தாலும், ஏற்கனவே மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை மேல் எழுப்ப இன்னும் எத்தனை நாள் ஆகுமோ என்ற எண்ணமும் மக்கள் மனதில் இரைந்து கொண்டே இருக்கிறது. நாட்டு மக்களை காக்க, அனைத்து தரப்பில் இருந்தும் நடிகர்கள், நடிகைகள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், பணம் படைத்தோர் என அனைவரும் தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்துவருகின்றனர்.
மோடி நாட்டு மக்களிடம் பேசிய போது, இந்த இக்கட்டான சூழலில் இருந்து மேடேற இந்திய மக்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்ற இந்திய துணாஇ ராணுவப்படையினர் தங்களின் ஒரு நாள் சம்பளமான ரூ. 116 கோடியை நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கினர்.
Advertisment
Advertisements
हमारे अर्धसैनिक बलों ने सदैव भारत की सुरक्षा और एकता के लिए अपना योगदान दिया है।
COVID-19 से लड़ने के लिए प्रधानमंत्री @narendramodi जी के आवाहन पर सभी अर्धसैनिक बलों के जवानों ने अपने एक दिन का वेतन (कुल योग ₹116 करोड़) PM-CARES में दिया है।
தமிழகத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கும் பலரும் நிதி அளித்து வருகின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு கோடி கொடுத்துள்ளார். திமுக எம்.பி கனிமொழி, மதுரை எம்.பி. வெங்கடேசன், வைகோ ஆகியோர் தங்களின் தொகுதி நிதியில் இருந்து கொரோனா தடுப்பு பணிக்கு பண உதவிகள் செய்து வருகின்றனர். டாட்டா நிறுவனம், டி.வி.எஸ் நிறுவனம், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களும் பெரும் நிதியை அளித்துள்ளனர். நடிகர் அக்ஷய் குமார் ரூ. 25 கோடியை நிதியாக கொடுத்துள்ளார். விளையாட்டு வீரர்கள் பி.வி.சிந்து, ரெய்னா ஆகியோரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
இந்தியா முழுவதும் எல்லை பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்ய 10 லட்சம் துணை ராணுவனத்தினர் அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.