Indian Railways: இந்திய ரயில்வே, நாட்டின் பெரிய அரசு நிறுவனம்! தினமும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பயணத்திற்கு நம்பியிருப்பது ரயில்வேயைத்தான். ரயில் பயணம், நாட்டின் அன்றாட செயல்பாட்டில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இதில் பெண்களுக்கு சில வசதிகளை இந்தியன் ரயில்வே செய்து வருகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள 3 ஏசி பெட்டிகளில் பெண்களுக்காக 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவை மத்திய ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Indian Railways Announcement For Women Passengers: பெண்களுக்கு தனி பெட்டிகள்!
நீண்ட தூரம் பயணத்திற்கு எப்போதுமே ரயில் பயணம் தான் சிறந்தது என்பார்கள். காரணம் படுக்கை வசதி மட்டுமில்லை பயணிகளை அலுங்காமல், குலுங்காமல் உடல் வலி அதிகம் தாராமல் ரயில்கள் சரியான நேரத்திற்கு பயணிகளை கொண்டு சேர்த்து விடும்.
அதே போல் பாதுகாப்பு கருதியும் அதிகமான பெண்கள் ரயில் பயணத்திற்கே அதிகம் முன்னுரிமை தருவார்கள். இந்நிலையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பெட்டிகளில் மட்டும் பெண்களுக்காக 6 படுக்கைகள் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன
இந்த வசதி ராஜ்தானி, துரந்தோ மற்றும் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில்களின் 3 ஏசி பெட்டிகளில் அமலாக்கப்படுகிறது. வயது வரம்பின்றி தனியாக அல்லது குழுவாகப் பயணம் செய்யும் பெண்கள் இதில் முன்பதிவு செய்யும்போது பலனடைவார்கள்.
ஏற்கெனவே, இதேபோன்று பெண்களுக்காக பல அனைத்து ரயில்களிலும் முன்பதிவில் இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வகை மெயில் மற்றும் விரைவு வண்டிகளின் சாதாரண வகுப்புப் பெட்டிகளில் 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கரீப் ரத் ரயிலிலும் 6 படுக்கைகள் முன்பதிவில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
read more.. அலுங்காம குலுங்காம மதுரை போகணுமா? இதோ வந்தாச்சு சொகுசு ரயில்
அனைத்து ரயில்களின் சாதாரண வகுப்பின் பொதுப்படுக்கை பெட்டிகளில் 6 மற்றும் ஏசி பெட்டிகளில் 3 என மூத்தகுடி, 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே ஒதுக்கீடு, ராஜ்தானி மற்றும் துரந்தோ ரயில்களின் அனைவருக்குமான பொதுப்பெட்டிகளில் 4 கீழ் படுக்கைகள் உள்ளன.