நிகிதா பிரசாத்
மும்பை - கோவா செல்லும் சொகுசு ரயில் தேஜா எக்ஸ்பிரஸில் இப்போது பயணிகள் மதுரைக்கும் செல்லலாம். அதுவும் அலுங்காமல் குலுங்காமல் ஜாலியா டிவி பார்த்துகிட்டே.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/tejas-express-4.jpg)
அதிநவீன வசதிகளை கொண்ட தேஜஸ் ரயிலானது இதற்கு முன்பு மும்பைக்கும் கோவாவிற்கும் இடையே இயக்கப்பட்டு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய ரயில்வேத்துறை தேஜஸ் சொகுசு விரைவு ரயிலை சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்க முடிவெடுத்துள்ளனர்.
Read More: நீண்ட தூரம் ரயில்களில் பயணம் செய்யும் பெண்களா நீங்கள்? இதோ உங்களுக்காக ரயில்வேயின் புதிய அறிவிப்பு!
மதுரை சொகுசு ரயில்
இந்த ரயில் 70 கிமீ வேகத்தில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 7 மணி நேரம் பயணம் நீடிக்கும் இந்த ரயிலை தேர்வு செய்யும் பயணிகளுக்கு போர் அடிக்காமல் இருக்க வைபை, ஏசி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பயணம் நேரம் :
காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 1 மணிக்கு மதுரையை சென்றடையும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னையை வந்தடையும்.
டிக்கெட் விலை:
சாதரண பெட்டியில் பயணிக்க ஒரு டிக்கெட் 1000 ரூபாய் விலையிலும், எக்ஸிக்யூடிவ் பெட்டியில் பயணிக்க தலா 2000 ரூபாய் தொகைக்கும் விற்பனை செய்யப்படும்.
IRCTC : எப்பவும் வெயிட்டிங் லிஸ்ட் வருகிறதா? உங்கள் டென்ஷனை குறைக்க வந்தாச்சு புதிய செயலி
இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. 1000, 2000 ரூபாய் தொகையில், அதுவும் சதாப்தி ரயிலை விட 20% அதிகமான விற்பனை தொகை இருக்கும் இந்த ரயிலின் வேகம் குறைந்தது தான் என்றும் விமர்சித்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/tejas-express-2.jpg)
இதுவரை சென்னையில் இருந்து மதுரைக்கு இயங்கி வரும் ரயில்களில், வைகை விரைவு ரயில் தான் 7 மணி நேரம் 40 நிமிடங்களில் செல்லும் ரயிலாக உள்ளது. அதையடுத்து தேஜஸ் ரயில் தான் அதி வேக ரயிலாக சென்னை - மதுரை செல்ல அறிமுகமாகியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/tejas-express.jpg)
எனினும் தமிழ்நாடு அரசு பஸ் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. இதனால் நடுத்தர குட்ம்பத்தினர்களையும் இந்த ரயில் கவரும் வகையில் சேவைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ரயில், திருச்சி மற்றும் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
read more.. அலுங்காம குலுங்காம மதுரை போகணுமா? இதோ வந்தாச்சு சொகுசு ரயில்