Advertisment

இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு ஒரு நற்செய்தி - இனி கூடுதல் கட்டணம் கிடையாது

ஐஆர்சிடிசி (IRCTC) யிடம் விலைபட்டியலுடன் கூடிய உணவு விவரப் பட்டியலை அதிகாரபூர்வ ரயில்வே இணையத்தளம், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் காட்சிப்படுத்த கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian railways catering service irctc

Indian railways catering service irctc

இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் பயணிகள் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் அதன் அதிக விலை குறித்தும் அடிக்கடி புகார் தெரிவிப்பது வாடிக்கை. இனிமேல் அந்த அதிகவிலை பிரச்சனை சரியாகப்போகிறது. நமது தேச போக்குவரத்தான, ரயிலில் வழங்கப்படும் உணவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில் பயணிகள் தங்கள் உணவுக்கு அதிக கட்டணம் கொடுப்பதை முடிவுக்கு கொண்டு வர இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று சமீபத்தில் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட ஒரு பதிலில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Advertisment

IRCTC பெயரில் போலி வெப்சைட்கள் : சூதானமா இருந்துக்கோங்க மக்காஸ்...

ரயிலில் வழங்கப்படும் உணவுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க இந்தியன் ரயில்வே எடுத்து வரும் 5 நடவடிக்கைகள்

ரசீது கொடுக்க கையடக்க கியூஆர் (QR) கோடுடன் கூடிய பிஒஎஸ் (POS) இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே அவற்றை பயணிகள் கைகளில் கொடுக்கலாம்.

ஐஆர்சிடிசி (IRCTC) யிடம் விலைபட்டியலுடன் கூடிய உணவு விவரப் பட்டியலை அதிகாரபூர்வ ரயில்வே இணையத்தளம், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் காட்சிப்படுத்த கூறப்பட்டுள்ளது.

அனைத்து உணவு பெட்டிகளும் அதிகப்பட்ச சில்லறை விலை (MRP) குறிக்கப்பட்டே வரும்.

IRCTC பயனாளரா நீங்க? : மெயில் இன்பாக்சை செக் பண்ணுங்க...அலர்ட் ஆகிக்கோங்க

வாங்கிய உணவுக்கு ரசீது கொடுக்கவில்லை என்றால் அதற்கான பணத்தை பயணிகள் கொடுக்கக் கூடாது என்பதை தெரிவிக்க ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

தொடர் கண்காணிப்புக்காக IRCTC மேர்ப்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ரயில்வேவுக்கு 2019 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கும் 31 டிசம்பர் 2019 இடைப்பட்ட காலக்கட்டத்தில் 1962 புகார்கள் வந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 989 புகார்கள் மீது ருபாய் 75,39,800 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 526 புகார்களுக்கு எச்சரிக்கை விடுப்பதன் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது, 273 புகார்கள் ஆலோசனை வழங்கியும், 55 புகார்கள் எந்த வித ஆதாரங்களும் இல்லாததாலும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 113 புகார்கள் எந்தவித காரணங்களும் இல்லாமல் முடித்து வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

IRCTC-ன் புதிய அறிவிப்பு - இனி ஆன்லைனிலேயே ரயில் முன்பதிவு சார்ட்டை சரி பார்க்கலாம்

Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment