Advertisment

Indian Railways : உங்கள் ரயில் பயணத்தை சௌகரியமாக்க இந்த ஆண்டு என்ன மாற்றங்கள் நடந்தது தெரியுமா?

Indian Railways : இந்தியன் ரயில்வேத்துறை கொண்டு வந்த 5 முக்கிய வசதிகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian Railways

Indian Railways

Indian Railways : 2018ம் ஆண்டு இந்தியன் ரயில்வேத்துறையில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளது. அவற்றில் 5 முன்னேற்றங்களை இந்த செய்து தொகுப்பு விவரிக்கும்.

Advertisment

ரயில் பயணிகளுக்கு பயணங்களை சவுகரியமாக்குவதற்காக இந்தியன் ரயில்வேத் துறை பல முயற்சிகளை மேற்கொண்டது. அந்த முயற்சிகளில் அடிப்படையில் பயணிகளுக்கு ஆதரவான சில மாற்றங்களும் நிகழ்ந்தேறியது.

Indian Railways 2018 : 2018ம் ஆண்டில் இந்தியன் ரயில்வேத்துறை அறிமுகம் செய்த திட்டங்கள்

ரயில்களில் இருக்கும் வசதிகள் மட்டுமின்றி டிக்கெட்டுகள் பெறும் வசதிகளிலும் பல முன்னேற்றங்கள் கொண்டு வந்துள்ளது இந்தியன் ரயில்வேத்துறை. அதன் பட்டியலை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1 . HHT செயலி : 

HHTs என்ற புதிய டேப்லட் செயலி ஒன்றை இந்தியன் ரயில்வேத்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி பொருத்தப்பட்ட டேப்லெட்டை டிடிஇ-களிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம், ரயில் எங்கே இருக்கிறது என்ற விவரத்துடன் இணைந்து வெயிட்டிங் லிஸ்ட் குறித்தும் கண்டறியப்படும். RAC மற்றும் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு விரைவில் டிக்கெட் பதிவு செய்து தருவதற்கு உதவும்.

எப்பவும் வெயிட்டிங் லிஸ்ட் வருகிறதா? உங்கள் டென்ஷனை குறைக்க வந்தாச்சு புதிய செயலி

2 . ரயில்கள் சீரமைப்பு

ரயில்களில் பயணிகளின் நலனுக்காக ஒரு லட்சம் பையோ டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பையோ டாய்லெட் அமைக்கப்பட்டதால், மக்கள் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பும் வராமல் தடுக்கப்படும். மேலும் பல ரயில்களில் மதுபனி வரைக்கலை செய்யப்பட்டுள்ளது.

3 . தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்

மதுரை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து சொகுசாக பயணிக்க இந்தியன் ரயில்வேத்துறை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்தது. இந்த ரயில் 70 கிமீ வேகத்தில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 7 மணி நேரம் பயணம் நீடிக்கும் இந்த ரயிலை தேர்வு செய்யும் பயணிகளுக்கு போர் அடிக்காமல் இருக்க வைபை, ஏசி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அலுங்காம குலுங்காம மதுரை போகணுமா? இதோ வந்தாச்சு சொகுசு ரயில்

4 . இ - கேட்டரிங் சேவை

ரயில் டிக்கெட் உறுதியாகும் வாய்ப்புகள், ரயில்களில் உணவுகள் ஆர்டர் செய்வது, கால்டாக்சி புக்கிங் என கலக்கும் ஐஆர்சிடிசி இணையதளம் பயணிகளை பெருமளவில் கவர்ந்துள்ளது. ரயிலில் உள்ள சமயலறையில் சமைக்கப்படும் உணவுகளை பயணிகளால் ஐஆர்சிடிசி இணையதளத்தில் லைவாக பார்க்க முடியும்.டெல்லி, மும்பை,ஜான்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் ரயில்களில் மட்டும் தற்சமயம் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் வைஃபை, பேட்டரி கார், ஓய்வு அறைகள் உள்ள பட்டியல், உணவுகளை ஆர்டர் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

 

IRCTC.co.in-ல் அசைவ உணவுகள், கால் டாக்ஸி புக்கிங் வசதிகள்: பயணிகள் மகிழ்ச்சி!!

5 . யூ.டி.எஸ் செயலி:

ரயில்களை முன்பதிவு செய்யும் IRCTC.co.in -ல், பயணிகளை கவரும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது ரயில்வே அமைச்சகம். பொதுமக்களின் வசதிக்காக, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்கி வருகிறது. இதனை மேலும் எளிமையாக்கும் விதமாகவும், காகித பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் விதமாகவும், யு.டி.எஸ்., எனும் மொபைல் செயலியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது. 5 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். ரயில்களில் முன்பதிவுசெய்யப்படும் டிக்கெட்டுகள், உறுதியாகக் கிடைக்குமா என்பதை இனி உடனுக்குடனே தெரிந்துகொள்ளலாம் என்ற வசதியை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

IRCTC.co.in -ல் புதிய வசதி அறிமுகம்....பயணிகள் மகிழ்ச்சி!!

Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment