Indian Railways : ரயில் பயணத்தின்போது முதியவர்களுக்கும் பெண்களுக்கும் லோயர் பெர்த் பதிவில் முன்னுரிமை வழங்க இந்தியன் ரயில்வே புதிய கோட்டாவை செயல்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 12 லோயர் பெர்த் சீட்டுகள் மட்டுமே ரிசர்வேஷன் செய்யப்படுகிறது. AC-3 பெர்த், AC - 2 பெர்த் முதியவர்களுக்காகவும், பெண் பயணிகள் மற்றும் கர்ப்பமான பெண்களுக்கு ரிசர்வ் செய்யப்படுகிறது. ராஜ்தானி, டொரோண்டோ மற்றும் பிற ஏசி ரயில்களில் 7 சீட்டுகளுக்கு ரிசர்வேஷன் செய்யப்படுகிறது.
Indian Railways Increases Lower Berth Quota : பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு லோயர் பெர்த்
இந்த புதிய கோட்டாவின் மூலம், ராஜ்தானி மற்றும் டொரோண்டோ போன்ற விரைவு ரயில்களில் லோயர் பெர்த் சீட்டுகளை பதிவு செய்ய பெண்கள் மற்றும் முதியவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
உங்களின் பயணத்தை எளிமையாக்கும் IRCTC .. டிக்கெட் புக் பண்ண இத்தனை வசதிகளா?
இது குறித்து ரயில்வேத்துறை தெரிவித்ததில், “லோயர் பெர்த் சீட்டுகளை பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அதிகமாக ஒதுக்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு சீட்டுகளை ஒதுக்கும் இரண்டு கோட்டாக்களை ஒன்றாக இணைத்துள்ளோம். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் இந்த திட்டம் அதிக அளவில் உதவும்” எனக் கூறப்பட்டுள்ளது.
IRCTC : உங்களுக்காக அறிமுகமாகிறது அதிநவீன ஹோட்டல்... இந்தியன் ரயில்வே புதிய திட்டம்
7 சீட்டுகள் பதிவில் இருந்து இப்போது இந்த கோட்டா மூலம் 13 சீட்டுகளாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கோச்சுக்கும் மேல் இருக்கும் ரயில்களில் 15 ஆகவும், ராஜ்தானி மற்றும் டொரோண்டோ ரயில்களில் 9 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.