Indian Railways Public WiFi Network : இந்தியாவில் ரயில் சேவையை பயன்படுத்தி பயணிப்பவர்கள் மிக அதிகம். அதனால் பயணிகளின் தேவைகளை மிகவும் சிறப்பாக செய்து வரும் முனைப்பில் அதிக தீவிரம் காட்டுகிறது ரயில்வே துறை அமைச்சகம்.
இந்தியா முழுவதும் உள்ள 715 மண்டல ரயில் நிலையங்களில் வை-பை என்ற அதிவிரைவு இணைய இணைப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது இந்திய ரயில்வே.
தற்போது மேலும் சுமார் 5,734 ரயில் நிலையங்களில் இந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் வை-பை சேவைகளை ரயில் நிலையங்கள் அனைத்திலும் நிறுவ இருப்பதாக நாடாளுமன்றத்தில், ரயில்வே இணைய அமைச்சர் ராஜென் கொஹெய்ன் தெரிவித்திருக்கிறார்,
ஏ1 மற்றும் ஏ என இரண்டு கேட்டகிரிகளாக ரயில் நிலையங்களை பிரித்து இணைய சேவையை கூகுளுடன் இணைந்து வழங்கி வருகிறது ரயில்வே அமைச்சகம். ஏ சேவையானது கிராமப்புறங்களில் இருக்கும் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளாகும். ஏ மற்றும் ஏ1 இவை இரண்டும் ரயில் நிலையத்தின் அளவு மக்கள் பயன்பாடு ஆகியவை கொண்டு தரம் பிரிக்கப்பட்டுள்ளது.
ரெயில்டெல் ( RailTel) அமைப்பும் இந்த சேவைகளை வழங்குவதற்காக தொலைத்தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. கூகுளுடன் இணைந்து பணியாற்றும் ரெயில்டெல் மக்களுக்கு தேவையான இணைய சேவையினை ஃபைபர் கேபிள் வழியாக வழங்க உள்ளது. இதனால் பயணிகள் மிக வேகமான இணைய சேவையை பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இனி கவலையே இல்லை.. ஊருக்கு போக என்ன ரயில்? வாட்ஸ் அப்பிலே அப்டேட்!
Indian Railways Public WiFi Network
கீழ் வரும் பட்டியலில் எந்தெந்த மாநிலங்களில், எத்தனை ரயில் நிலையங்களில் இணைய சேவைகள் வழங்கப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆந்திரா - 449
அருணாச்சலப் பிரதேசம் - 22
அசாம் - 225
பிகார் - 366
சத்தீஸ்கர் - 109
டெல்லி - 25
கோவா - 6
குஜராத் - 352
ஹரியாணா - 117
ஹிமாச்சல் பிரதேசம் - 42
ஜம்மு மற்றும் காஷ்மீர் - 29
ஜார்காண்ட் - 191
கர்நாடகா - 159
கேரளா - 110
மத்தியப் பிரதேசம் - 363
மகாராஷ்ட்ரா - 489
மணிப்பூர் - 2
மேகலாயா -2
மிசோரம் -1
நாகலாந்து - 2
ஒடிசா -207
புதுச்சேரி -3
பஞ்சாப் ‘-211
ராஜஸ்தான் - 453
தமிழ்நாடு - 428
தெலுங்கானா - 10
திரிபுரா - 12
உத்திரப் பிரதேசம் - 785
உத்திரகாண்ட் - 19
மேற்கு வங்கம் - 565