Advertisment

ரயில் பயணத்தின் போது விபத்து.. உங்களால் 10 லட்சம் வரை இன்சூரன்ஸ் பெற முடியும் தெரியுமா?

பயணத்தின்போது விபத்தால் உடல் உறுப்புகளை இழந்தால், ரூ.7.5 லட்சம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indian railways ticket booking

indian railways ticket booking

indian railways ticket booking : நீங்கள் தினமும் மேற்கொள்ளும் பயணம் தான் ரயில் பயணம். அன்றாட வேலைக்கு செல்பவர்கள், சொந்த ஊர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்பவர்கள், வெளியூர்களுக்கு செல்பவர்கள் பலரும் பேருந்து பயணத்தை காட்டிலும் முதல் தேர்வாக ரயில் பயணம் தான் இருக்கிறது.

Advertisment

பாதுகாப்பு, உடல் அசதி, வேகம், நேரம் பல்வேறு வசதிகள் என எத்தனையோ காரணங்களுக்காக பயணிகள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்த ரயில் பயணத்தில் உங்களின் உயிர் பாதுகாப்பிற்காவும் இந்தியன் ரயில்வேஸ் பல்வேறு வசதிகளை வைத்திருக்கிறது. இதுக் குறித்து உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். ரயிலில் செல்லும் போது உங்களுக்கு விபத்து நேர்ந்தால் அதற்காக நீங்கள் காப்பீடு தொகை ரூ. 10 லட்சம் வரை பெற முடியும். முடிந்த வரை இந்த தகவல் மற்றும் விவரங்களை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

'Traffic' ஷகுர் பானு : இரவில் மருத்துவமனை பனி... பகலில் போக்குவரத்தை சீர் செய்தல்.

டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகம செய்து வந்தது. விபத்தால் பயணி உயிரிழந்தால், அதிகபட்சமாக 10 லட்சம் வரை இழப்பீடு, பயணத்தின்போது விபத்தால் உடல் உறுப்புகளை இழந்தால், ரூ.7.5 லட்சம், காயமடைந்தால் 2 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. விபத்தால் இறந்தோர் சடலத்தை கொண்டு செல்ல பத்தாயிரம் ரூபாய் போக்குவரத்து செலவாக கொடுக்கப்பட்டது.

இதன் மூலம் எத்தனையோ பயணிகள் பயன் அடைந்தார்கள். விபத்தில் ஊனமடையும் பயணிகளுக்கு ரூ.7½ லட்சமும், காயமடைந்தால் ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் உடலை எடுத்துச்செல்ல ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு வரை இந்த இன்யூரன்ஸ் இலவச திட்டமாக இருந்து வந்தது.

தட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா? அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்

ஆனால் அதன் பின்பு அதற்கு பதிலாக இன்சூரன்ஸ் திட்டம் விருப்ப தேர்வாக அமைந்தது. அதாவது இன்சூரன்ஸ் தேவை என்றால் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அதை தேர்வு செய்ய வேண்டும்.இதற்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

இன்யூரன்ஸ் பெறுவது எப்படி?

பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 'பயண காப்பீடு' பிரிவில் கிளிக் செய்ய வேண்டும். பின்னர், அவர் / அவள் கொள்கை தகவல்களை ஒரு எஸ்எம்எஸ் மூலமாகவும், பதிவுசெய்த மின்னஞ்சல் ஐடிகளிலும் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து நேரடியாகப் பெறுவார்கள். நியமன விவரங்களை தாக்கல் செய்ய ஒரு இணைப்பு வழங்கப்படும்.

டிக்கெட்டை முன்பதிவு செய்த பின்னர், பயணிகள் விவரங்களை அந்தந்த காப்பீட்டு நிறுவன தளத்தில் நிரப்ப வேண்டும். ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் அல்லது பயன்பாட்டின் மூலம் டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரயில் காப்பீட்டை வழங்கும் மூன்று காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன - பாரதி ஆக்சா பொது காப்பீடு, பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீடு மற்றும் ஸ்ரீராம் பொது காப்பீடு.

Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment