தட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா? அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்

ஏ.சி இல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கு முன்பதிவு

IRCTC tatkal train ticket booking : இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் என்று அழைக்கப்படும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதேபோல “ரயில் கனெக்ட் ஆப்’ என்ற ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரப்பூர்வ ஆப் மூலமும் ரயில்வே டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் முறை உள்ளது.

பயணத்திற்கு ஒருநாளுக்கு முன் தட்கல் டிக்கெட் புக் செய்யலாம். ஏ.சி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கு முதல் தட்கல் முன்பதிவு ஆரம்பிக்கும். ஏ.சி இல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்கும்.

tatkal train ticket booking : புக்கிங் நேரம் மற்றும் தட்கல் புக்கிங் செய்வது எப்படி?

1. irctc.co.in இணைதளத்தில் ஒரு கணக்கு தொடங்கவும். அதற்கான ஐடி மற்றும் பாஸ்வேடை டைப் செய்து உள்ளே நுழையவும்.

2. பின், புறப்படும் இடம் மற்றும் போக வேண்டிய இடம், பயண தேதி மற்றும் விருப்பமான வகுப்பு ஆகியவற்றைத் தேர்வு செய்து Find Trains என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லும் ரயில்கள் ஏதும் இல்லை என்றால், ’Flexible with Date’ என்பதை க்ளிக் செய்தால் எந்த தேதியில் ரயில்கள் உள்ளது எனத் தகவல் கிடைக்கும்.

4. இப்போது பயண நேரம், புறப்படும் நேரம், போய்ச்சேரும் நேரம் போன்ற தகவல்களுடன் ரயில்களின் பட்டியல் திரையில் வரும்.

5. ரயில் பட்டியலுக்கு மேல் உள்ள கோட்டா (Quota) என்பதில் தட்கல் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.இருக்கை விபரம் மற்றும் கட்டணத்தைத் தெரிந்துக் கொள்ள ‘Check availability & Fare’ என்பதை கிளிக் செய்யலாம்.இப்போது, ரயிலில் இருக்கை விவரம், கட்டணம் ஆகியவை தெரியும்.

6. ‘Book Now’ என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்துக்குச் செல்லவும்.பயணிகளின் பெயர், வயது ஆகிய விபரங்களைச் சரியாக டைப் செய்யும். முதியோருக்கு சலுகை பெற Senior Citizen Concession என்பதை தேர்வு செய்ய வேண்டும். (முதியோர் சலுகை பெற தகுதியான குறைந்தபட்ச வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 58)

ரயில் டிக்கெட்டுகளை IRCTC- ல் புக் செய்பவரா நீங்கள்? கொஞ்சம் இத படிங்க

7. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் என ஏதாவது ஒரு வழியில் டிக்கெட் கட்டணத்தை செலுத்தலாம்.பணம் செலுத்தி டிக்கெட் உறுதி செய்யப்பட்டதும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு டிக்கெட் விவரமும் ஈமெயிலுக்கு டிக்கெட்டும் அனுப்பி வைக்கப்படும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close