irctc booking tickets : ரயிலில் பயணம் செய்பவர்கள் முதலில் ரயில் நிலையங்களுக்கு சென்று முன்பதிவு செய்து கொண்டிருந்த நிலை டிஜிட்டல் யுகத்தில் மாறியது. ஐஆர்சிடிசி யின் மொபைல் செயலியிலோ அல்லது இணைய தளத்திலோ சென்றால் எளிய முறையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பமசங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு ஐஆர்சிடிசி தளத்தில் மட்டும் லட்சக்கணக்காணோர் டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றன. மிகவும் சுலபமாக இதன் நடைமுறை உள்ளதால் மக்களால் எளிதில் இதனை பயன்படுத்த முடிகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதிகளையும் எளிமையாகவும் சிறப்பாகவும் மேம்படுத்தியுள்ளது . வெளியூர் செல்ல கடைசி நிமிடத்தில் பயணம் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, தட்கல் டிக்கெட் மிகப்பெரும் உதவியாக இருந்து வருகிறது.அவசர தேவைக்கும் இறுதி நிமிட பயணத்திற்கும் இந்திய ரயில்வேயின் irctc.co.in தளத்தில் இந்தத் தட்கல் டிக்கெட்டைப் பதிவு செய்துக் கொள்ளலாம். இது பயணிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதுப்போன்ற பல்வேறு வசதிகள் ஐஆர்சிடிசியில் உள்ளன. இதனாலேயே ஐஆர்சிடிசி-யில் டிக்கெட் புக்கிங் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் வரவேற்பை தெரிந்துக் கொண்ட ரயில்வே நிர்வாகம் இப்போது 98 சதவீதம் ரயில்வே டிக்கெட் முன்பதிவை விற்பனை செய்ய தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதற்கு ரயில்வே தொழிற்சங்கம் முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மென்பொருள் மூலம் ஐஆர்சிடிசி தனது வேகத்தை அதிகரித்து இதனை செயல்படுத்தலாம் என ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. ஆனால் இந்த மென்பொருளை ஐஆர்சிடிசி க்கு தரக்கூடாது என ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
அமலுக்கு வந்தது புதிய ரயில் கட்டணம்... சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும்
இதற்கு காரணம், ஆன்லைனில் 90 சதவீதத்திற்கு மேல் டிக்கெட் புக்கிங் அதிகரித்தால் ஒருசிலர் மட்டுமே கவுண்ட்டரில் டிக்கெட் முன்பதிவு செய்வது, வாங்குவதில் கவனம் செலுத்துவார்கள். இது இப்படியே நீண்டால் பாதிக்கு மேல் ரயில்வே ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
வெளியூர் செல்ல ஐஆர்சிடிசி-யில் டிக்கெட் புக் செய்பவரா நீங்கள்? இதுக் குறித்து உங்களின் கருத்து என்ன?