IRCTC pod hotels : ஐ.ஆர்.சி.டி.சி பாட் ஹோட்டல் அமைக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது. ரயில் பயணங்கள் மேற்கொள்பவர்கள் வசதியாக தங்கிச் செல்ல இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவர்களில் பெரும்பாலானோர் ரயில் நிலையங்களுக்கு அருகிலேயே ஹோட்டல் அல்லது லாட்ஜ் தேடி அலைவார்கள். காரணம், ரயிலை பிடிக்க அதுவே வசதி என்பது தான். இருப்பினும் ஒரு சில நேரங்களில் அவர்கள் தேடலுக்கு ஏற்றார்போல் அமைவது கடினமே. இந்த நெருக்கடியை போக்க, ஐஆர்சிடிசி ஒரு திட்டத்தை கொண்டு வர முடிவெடுத்துள்ளது.
North East Tour: ஷிலாங்க் - சிரப்புஞ்சி சுற்றிப்பார்க்க வேண்டுமா? சூப்பர் பிளான் இதோ
IRCTC pod hotels : இந்தியன் ரயில்வே அதிநவீன ஹோட்டல்
இது பற்றி ஐஆர்சிடிசி-யின் செய்தித் தொடர்பாளர் பினாகின் மொரவாலா கூறுகையில், “முதலில் 30 பாட் அறைகள் கொண்ட ஹோட்டல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேற்கு ரயில்வேத் துறையிடம் இருந்து ஒப்புதல் வருவதற்காக காத்திருக்கிறோம். இதற்கான நிலம் தேர்வாகியுள்ளது. ஒப்புதல் பெற்ற பிறகு இதன் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.” என்றார்.
ஒவ்வொரு அறையும், 7 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டிருக்கும், உள்ளே சிறிய டிவி, வை-ஃபை, சார்ஜர், விளக்கு வெளிச்சம் குறைக்கும் வசதி, மற்றும் அறையின் சூடு/ ஏசி ஆகியவற்றை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றும் வசதியும் அமைந்திருக்கும்.
இந்த பாட் ஹோட்டல் முதலில் மும்பையிலேயே கொண்டுவரப்பட உள்ளது. சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் இதில் தங்க 2500 ரூபாய் கட்டணம் பெற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலை விவரங்களும், ஒப்புதல் வந்த பிறகே நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
இந்த ஹோட்டல் அறிமுகமானால் பொதுமக்கள் பலரும் ஹோட்டல் தேடி அலையும் தேவை இருக்காது என்றும், ரயில்வே நிலையம் அருகிலேயே தங்கிக் கொள்வதால் பெரும்பாலும் ரயில்களை தவரவிடும் நிலையும் ஏற்படாமல் தடுக்கலாம் என ஐஆர்சிடிசி தரப்பில் கூறப்படுகிறது.
Indian Railways : உங்கள் ரயில் பயணத்தை சௌகரியமாக்க இந்த ஆண்டு என்ன மாற்றங்கள் நடந்தது தெரியுமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.