லாக் டவுனுக்கு பிறகான டிக்கெட் புக்கிங் - தெளிவுப்படுத்திய ரயில்வே நிர்வாகம்

IRCTC Advance Booking: கோவிட் -19 தொற்று நோய் காரணமாக, இந்திய ரயில்வேயில் உள்ள பிரீமியம் ரயில் சேவைகள், Mail அல்லது எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள்,...

IRCTC: ஊரடங்கு காலத்துக்கு பிறகு பயணிகள் ரயில் சேவைகளுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்வது குறித்து இந்திய ரயில்வே ஒரு முக்கியமான தெளிவுபடுத்துதலை வழங்கியுள்ளது. ஊரடங்குக்கு பிந்தைய காலத்துக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவை இந்திய ரயில்வே துவங்கி விட்டதாக சில ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தன. ரயில்வே அமைச்சகத்தின் படி, ஏப்ரல் 15, 2020 முதல் இந்திய ரயில்வே ரயில் பயணச்சீட்டு முன்பதிவை மீண்டும் துவங்கி விட்டதாக சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி சரியானது அல்ல. ஊரடங்குக்கு பிந்தைய காலத்திற்கான ரயில் பயண்ச்சீட்டு முன்பதிவு ஒருபோதும் நிறுத்தப்படவில்லை என்றும் எந்த புதிய அறிவிப்புக்கும் இது தொடர்புடையது அல்ல என்றும் ரயில்வே அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத் மாநாடே காரணம் – பிரச்சாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை!

ரயில்வே அமைச்சகத்தின் படி, பயணிகள் ரயில் சேவை பயணச்சீட்டு முன்பதிவு நாடுதழுவிய ஊரடங்கு காலமான 24 மார்ச் 2020 முதல் 14 ஏப்ரல் 2020 தவிர ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. இந்திய ரயில்வேயில் உத்தேசிக்கப்பட்ட பயண தேதிக்கு 120 நாட்கள் முன்கூட்டியே பயணத்துக்கான ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், ஏப்ரல் 15, 2020 மற்றும் அதற்கு பிறகான காலத்திற்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்வது ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பிருந்தே திறந்து இருக்கிறது, என ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

கோவிட் -19 தொற்று நோய் காரணமாக, இந்திய ரயில்வேயில் உள்ள பிரீமியம் ரயில் சேவைகள், Mail அல்லது எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள், பயணிகள் ரயில் சேவைகள், புறநகர் ரயில் சேவைகள், கொல்கத்தா மெட்ரோ ரயில் மற்றும் கொங்கன் ரயில் சேவைகள் உட்பட அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் 14 ஏப்ரல் 2020 வரை ரத்து செய்யப்பட்டன. எனினும் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தை உறுதிசெய்வதற்காக சரக்கு ரயில் சேவைகள் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்திய ரயில்வே பணியாளர்களை பல்வேறு good sheds, கட்டுப்பாட்டு அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் 7 நாட்களும் 24 மணிநேரமும் பணி அமர்த்தி வேலை செய்துவருகிறது.

இந்த காட்சியை காண 30 வருடங்கள் ஆனது! பஞ்சாப் மக்கள் மகிழ்ச்சி

மேலும் ஊரடங்கு காலத்தில் (மார்ச் 21 முதல் 14 ஏப்ரல் வரை) அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், இணையதளம் மூலமாகவும் ரயில் நிலைய கவுண்ட்டர்கள் மூலமாகவும் இந்த நாட்களில் பல்வேறு ரயில்களில் பயணம் செய்ய பயணச்சீட்டு முன்பதிவு செய்த அனைத்து ரயில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் பயணச்சீட்டுத் தொகையை திருப்பி செலுத்தி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close