வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவுக்கு ரூ.5,300 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
Union Budget 2023-24 Live Updates
தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்ற பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டான இது நாட்டு மக்கள் மத்தியிலல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூலதன முதலீட்டு செலவு 33 சதவீதம் அதிகரித்து ரூ10 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான செலவு, 66 சதவீதம் கூடுதலாக, ரூ79000 கோடியாக உயர்த்தப்படும். கிராமங்களில் வேளான் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிக்கப்படும்.
157 புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும். கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகத்தின் மத்திய பகுதிக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் ரூ5300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நிதியுதவி அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/