கொரோனாவுக்கு பலியான முதல் இந்தியர் ; உறவினர்களின் தவறான வழிநடத்துதலால் நிகழ்ந்த சோகம்!

COVID 19 : தெலுங்கானா மாநிலத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை அம்மாநில அரசு உறுதி செய்திருக்கிறது

COVID 19 : தெலுங்கானா மாநிலத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை அம்மாநில அரசு உறுதி செய்திருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரொனோ-வுக்கு இந்தியாவில் இரண்டாவது பலி டெல்லியில் 69 வயது மூதாட்டி மரணம்

Sreenivas Janyala , Johnson T A

India’s first corona death: 72-year-old Karnataka man died : நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரானா வைரசால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் இந்த நோய்க்கு பலியாகியுள்ளார்.  ஹைதராபாத்திலிருந்து, கர்நாடகாவில் இருக்கும் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பும்போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் சவுதி அரேபியாவிற்கு புனித பயணம் சென்ற அவருக்கு, இந்தியா திரும்பியதும், நோயின் அறிகுறிகள் தெரிய வந்தது.  ஏற்கனவே ஆஸ்துமா மற்றும் ஹைப்பர் டென்சனால் அவர்  பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

கர்நாடக மாநில சுகாதாரத் துறை ஆணையர் பங்கஜ் பாண்டே நேற்று இரவு ”76 வயது மிக்க, கர்நாடகாவின் கலபுராகி என்ற பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.  அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணையும், அவர்களை தனிமைப்படுத்த முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை அம்மாநில அரசு உறுதி செய்திருக்கிறது” என்று கூறினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

பிப்ரவரி மாதம் 29ம் தேதி சவுதி அரேபியாவிலிருந்து ஹைதராபாத்திற்கு வந்தார் அந்த முதியவர். அங்கிருந்து, கர்நாடகா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் சொந்த ஊரான கலபுராகி சென்றார். அவருக்கு கொரோனாவின் அறிகுறிகளான காய்ச்சல் மற்றும் இருமல் அதிகமானது. மார்ச் 6 ஆம் தேதி அன்று மருத்துவர் ஒருவர் அவருடைய வீட்டில் அவரை பரிசோதனை செய்தார். மார்ச் 9ஆம் தேதி நோயின் அறிகுறிகள் அதிகமானது தொடர்ந்து கலபுராகியில் இருக்கும்இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே நாளில் அவருடைய ரத்த மாதிரியை குல்பர்கா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஹாஸ்பிடலில் இருந்து எடுக்கப்பட்டு பெங்களூர் மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூடிற்கு அனுப்பியது.பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அவரின் உறவினர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்யவேண்டும் என்று கேட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

கலபுராகி மாவட்ட துணை ஆணையர் ஆணைக்கு இணங்கள், அம்மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர், முதியவரின் உறவினர்களை சந்தித்து கலபுராகியில் இருக்கும் குல்பர்கா மருத்துவமனையில் இருக்கும் தனியார் வார்டில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவரின் அறிவுரையையும் மீறி ஹைதராபாத்திற்கு அழைத்துச்சென்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க : கொரோனா : ஒரு மாதத்திற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை… எல்லைகளும் மூடப்படுகிறது!

மருத்துவர்களின் அறிவுரைக்கு மாறாக அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். சில நாட்கள் சிகிச்சை எடுத்தவருக்கு உடல்நிலை சரியாக துவங்கியதும், அந்த மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து தங்கள் சொந்த ஊருக்கு உறவினர்கள் அழைத்து வந்தனர். ஆனால் வருகின்ற வழியே அவர் மரணமடைந்தார் கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இவரின் மரணம் கொரோனாவால் தான் நிகழ்ந்ததா என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட, அவரின் மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவருடன் தொடர்பில் இருந்த அனைத்து நபர்கள் குறித்தும் மேற்பார்வையிட்டு, தனிமைப்படுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் முதல் கொரோனா கேஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதி வைரலாஜி லேப் இதனை உறூதி செய்தது. இத்தாலியில் இருந்து மார்ச் மாதம் 6ம் தேதி இந்தியா வந்துளார். தற்போது அந்த நபர் நலம் பெற்றிருப்பதாகவும், இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: