IndiGo Inflight Smoking : பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது என்பதை சட்டமாக வரையறுத்தாலும் பொதுவாக யாரும் கடைபிடிப்பதில்லை. திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், மற்றும் பெருந்திரளாக மக்கள், குழந்தைகள் கூடும் இடங்களில் கூடுமான வரையில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதைப் போலவே, விமானங்களிலும் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய விமானப் பயண பாதுகாப்பு விதிமுறைகளின் படி விமானங்களுக்குள் புகைப்பிடித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
விஸ்தாரா விமானம்
கடந்த வாரம் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய விஸ்தாரா விமானம் புறப்பட மூன்று மணி நேரம் தாமதமானது. காரணம் என்னவென்றால், நான் சிகரெட் புகைத்தே தீருவேன் என்று விடாப்பிடியாக பயணி ஒருவர் விமானத்திற்குள் அமர்ந்து கொண்டு சண்டை பிடித்துள்ளார். பஞ்சாப் அமிர்ந்தசரஸில் இருந்து கல்கத்தாவிற்கு செல்லும் விமானம் டெல்லியில் ஹால்ட் ஆகி செல்வது வழக்கம்.
UK - 707 விமானம் மூன்று மணி நேரம் தாமதமானதைத் தொடர்ந்து, விஸ்தாரா நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. சிரமத்திற்கும் தாமதத்திற்கும் வருந்துகின்றோம். எங்களுடைய பயணி ஒருவர் புகைக்க வேண்டும் என்று கூறி பிரச்சனை செய்ததால் இந்த தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் மற்ற பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என்று கூறி அறிவிப்பு செய்தனர்.
மேலும் படிக்க : தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்… தமிழகத்தை சேர்ந்தவருக்கு அமெரிக்கா கொடுத்த தண்டனை!
இண்டிகோ விமானம் (IndiGo Inflight Smoking)
இதே போல் கிறிஸ்துமஸ் அன்று, அகமதாபாத்தில் இருந்து கோவா சென்ற இண்டிகோ விமானம் 6E-947-ல், விமானத்தின் கழிவறையில் பயணி ஒருவர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து அவரின் நடவடிக்கை விமானத்தின் பைலட்டிற்கு அறிவிக்கப்பட்டது.
விமான ஊழியர்கள், அந்த பயணியிடம் விதிமுறைகளை எடுத்துக் கூறினார்கள். பின்பு கோவாவில் தரையிறங்கியதும், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் கைது செய்யபட்டார். அந்த பயணியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.