Advertisment

வி.ஐ.டி., கே.ஐ.ஐ.டி சிறப்பு அங்கீகார விவகாரம் : யுஜிசியிடம் மத்திய அரசு கேள்வி

தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மத்திய அரசு ரூ. 1000 கோடியை நிதியாக வழங்க உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வி.ஐ.டி., கே.ஐ.ஐ.டி சிறப்பு அங்கீகார விவகாரம் :  யுஜிசியிடம் மத்திய அரசு கேள்வி

Institutes of eminence tag :  ஒடிசாவின் கலிங்கா கல்வி நிறுவனமும் ( Kalinga Institute of Industrial Technology (KIIT)), தமிழகத்தின் வி.ஐ.டி (Vellore Institute of Technology (VIT)) நிறுவனமும் மத்திய அரசின் சிறப்பு அங்கீகாரத்தினை பெறுவதற்கு தகுதி பெற்றதா என்று மத்திய அரசு பல்கலைக்கழக மானியக்குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள தகுதிகளை வி.ஐ.டி. மற்றும் கே.ஐ.ஐ.டி பூர்த்தி செய்யவில்லை என்று மார்ச் 3ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

Advertisment

மத்திய அரசின் இந்த சிறப்பு அங்கீகாரத்தினை பெறுவதற்கு கல்வி நிறுவனங்கள் அறக்கட்டளைகள் மூலம் இயக்கப்பட வேண்டும் அல்லது லாப நோக்கமற்ற அமைப்புகளால் நடத்தப்பட வேண்டும் அல்லது பப்ளிக் ட்ரஸ்ட் அல்லது கம்பனீஸ் ஆக்ட் 2013-ன் கீழ் நிறுவனங்கள் இந்த கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட வேண்டும்.

இந்த கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களின் மொத்த சொத்து மதிப்பு (நெட் வொர்த்) ரூ. 3000 கோடியாக இருக்க வேண்டும். இனிமேல் புதிதாக கட்டப்படும் கல்வி நிறுவனமாக இருந்தால் ரூ. 5000 கோடி இருக்க வேண்டும் என்ற தகுதியையும் அது குறிப்பிட்டிருந்தது. ஆனால் வி.ஐ.டி மற்றும் கே.ஐ.ஐ.டி தங்கள் உடமைகளின், உதாரணமாக, நிலம், கட்டிடங்கள், மார்க்கெட் வேல்யூவை நெட்வொர்த்தாக விண்ணப்பப் படிவங்களில் குறிப்பிட்டு அனுப்பியிருந்தது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

சிறப்பு அங்கீகாரத்தைப் பெறுவதற்காக கல்வி நிறுவனங்களை பரிந்துரை செய்யும் எக்ஸ்பெர்ட் கமிட்டி தலைவர் என். கோபாலசாமியிடம் பேசிய போது “எம்பவர்ட் எக்ஸ்பெர்ட் கமிட்டி, கல்வி நிறுவனங்களின் தகுதியை பரிசோதிக்காது. பரிந்துரைக்கான பெயர்களையும், இந்த நிறுவனங்கள் இந்த தகுதிகளை பெற்றுள்ளது என்றும் மத்திய அரசு தான் பட்டியலை எங்களுக்கு அனுப்பும். தகுதிகளை பூர்த்தி செய்த நிறுவனங்களின் பட்டியல் தான் எங்களுக்கு வரும். அதில் சிறந்ததை தேர்வு செய்வது மட்டும் தான் எங்களின் வேலை என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : UGC சிறப்பு அங்கீகாரம் : முக்கிய தகுதி வரம்பை எட்டாத வேலூர் VIT…

எங்களுக்கு பட்டியல் அனுப்பப்படும் போது அதில் சில இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. பல்கலைக்கழக மானியக் குழுவும் அமைச்சரவையும் தான் அதனை பார்த்து ஒரு முடிவினை எட்ட வேண்டும். மேற்சொன்ன தகுதி விதிமுறை பல தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுத்தியதால் அவர்கள் விண்ணப்பிக்கவே இல்லை.

சிறப்பு அங்கீகாரத்தை பெறுவதற்கான இந்த திட்டம் பிரதம மந்திரியால் அறிமுகம் செய்யப்பட்டது. உலக அளவில் சிறந்த கல்வியை வழங்கும் நிறுவனங்களுக்கு நிகராக இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 10 அரசு கல்வி நிறுவனங்களும், 10 தனியார் நிறுவனங்களும் பயன்பெறும். இந்நிறுவனங்கள் படிப்பிற்கான கட்டணத்தை கூட தானே நிர்ணயம் செய்யும் அளவில் சுயாட்சி பெறும். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டாகவும் செயல்படும். தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மத்திய அரசு ரூ. 1000 கோடியை நிதியாக வழங்க உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

Ugc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment