வருமான வரி செலுத்தும் படிவம் : எளிமையாக்கப்பட்டது எப்படி ?

2003-2004ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது ஒற்றைப்பக்க வருமான வரி படிவத்தினை அறிமுகப்படுத்தினார் ஜஸ்வந்த்.

2003-2004ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது ஒற்றைப்பக்க வருமான வரி படிவத்தினை அறிமுகப்படுத்தினார் ஜஸ்வந்த்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Integrated E-filing and Centralised Processing Centre 2.0 project

வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

Integrated E-filing and Centralised Processing Centre 2.0 project : வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளும் முறையை அடுத்த ஆண்டில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வர திட்டம் தீட்டியுள்ளது இந்திய அரசு.

Advertisment

அதற்காக புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த புதிய மென்பொருளில் ஏற்கனவே வருமான வரி செலுத்துபவரின் கணக்கில், அவருடைய பெயர், பான் கார்ட் எண், மற்றும் அவருடைய முழு விபரங்கள் அடங்கியிருக்கும்.

Integrated E-filing and Centralised Processing Centre 2.0 project

ஊதியம் மற்றும் வருவாய் போன்ற விபரங்களை மட்டும் உள்ளீடாக கொடுத்தால் போதும். அதிக நாட்கள் காத்திருக்கவோ, மண்டையை பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்யவோ இனிமேல் தேவை இருக்காது.

Advertisment
Advertisements

இந்த ஐடியா எங்கே இருந்து வந்தது ? மிகவும் எளிமையான முறையில் வருமான வரி ரிட்டர்ன் செய்வதற்கான படிவத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகித்தார் முன்னாள் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சின்ஹா.

தன்னுடைய அமைச்சகத்தின் கீழ் இந்த பொறுப்பினை ஒப்படைத்து சென்றுவிட்டவருக்கு 10 பக்கத்தில் படிவத்தினை நீட்டினார்கள் அலுவலர்கள். அனைத்தையும் முற்றிலுமாக நிராகரித்துவிட்டு, புத்தம் புதிதாக மிகவும் எளிமையான படிவத்தினை தயாரிக்கச் சொல்லி மீண்டும் கட்டளையிட்டர் ஜஸ்வந்த் சின்ஹா.

2003-2004ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது ஒற்றைப்பக்க வருமான வரி படிவத்தினை அறிமுகப்படுத்தினார் ஜஸ்வந்த்.

டின் தோன்றிய வரலாறு

100 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் மிகவும் திருப்திகரமான ஒரு செயலியையோ, இணைய தளத்தையோ, முதல் முறையாக வெற்றிகரமாக செயல்படுத்திட இயலாது. ஆனால் படிப்படியாக மாற்றங்களை கொண்டு வந்து முறையான பயன்பாட்டினை பெறலாம். இப்படியாகவே 15 வருடங்களுக்கு முன்பு டின் எண்ணும் Tax Information Network (TIN) அறிமுகம் செய்யப்பட்டது. நிதி அமைச்சருக்கு ஆலோசகராக செயல்பட்ட விஜய் கெல்கரின் குழு இந்த நெட்வொர்க்கை முதலில் அறிமுகம் செய்தது.

காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஆட்சியில் இருக்கும் டாக்ஸ் அட்மினிஸ்ட்ரேஷம் ரிஃபார்ம்ஸ் கமிஷன் அமைத்தது. அந்த கமிஷனின் பரிந்துரையில் தான் ப்ரீ-ஃபில்ட் இன்கம்-டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் ஐடியா உருவானது. தற்போது அதனையோ இம்ப்ளிமெண்ட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்த அரசு.

மேலும் படிக்க : வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் ரீஃபண்ட்!

Integrated E-filing and Centralised Processing Centre 2.0 project

ரூ.4,241.97 கோடி மதிப்பில் உருவாகும் இந்தத் திட்டத்துக்கு ஒருங்கிணைக்கப்பட்ட இ-பைலிங், சென்ட்ரலைஸ்ட் பிராஸஸிங் சென்டர் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி தற்போது வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த பின், அதைப் பரிசீலனை செய்து மீண்டும் அவர்களுக்குப் பணத்தை அளிக்கச் சராசரியாக 63 நாட்கள் ஆகும்.

இந்நிலையில் இந்த புதிய மென்பொருள் மூலம் அந்தப் பணி ஒருநாளில் முடிந்துவிடும். இந்தப் புதிய மென்பொருள் தயாரிக்கும் வேலை இன்போசிஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது.

Income Tax

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: