ஐ.என்.எக்ஸ் வழக்கு : குற்றம் சாட்டப்பட்டவரே பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார் – துஷார் மேத்தா

அனைத்து குற்றங்களும் டிஜிட்டலில் நடைபெற்றுள்ளது. அதனால் தான் அதற்கான ஆவணங்கள் சட்டென அழிக்கப்பட்டுவிடுகின்றன.

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

INX Media case Chidambaram playing victim card : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், சிதம்பரம் சி.பி.ஐ கைதில் இருந்து தப்பிக்க, இடைக்கால தடை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த விசாரணை திங்களன்று தொடங்கியது. நேற்று வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்திருந்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் நேற்று மீண்டும் அம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதாடினார்.

நீதிபதிகள் போபண்ணா மற்றும் பானுமதி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் செய்த நபரே பாதிக்கப்பட்டவர் போன்று தன்னை சித்தகரித்து கொள்கிறார் என ப.சிதம்பரத்தை குறித்து வாதாடினார்.  திங்கள் கிழமையன்று நடந்த விவாதத்தின் போது, குற்றம் 2007-2008ல் நடைபெற்றது. சிதம்பரம் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றங்கள் எதுவுமே பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் நடைபெற்ற காலகட்டத்தில், இடம்பெறவில்லை என்று ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடினார்.

மேலும் படிக்க : இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இதற்கு நேற்று எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய துஷார் மேத்தா, அமலாக்கத்துறையின் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யும் போது பணம் மோசடி நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தது. 2007-2008ம் ஆண்டு குற்றம் நடைபெற்றிருந்தாலும் அதன் மூலம் பணப் பரிமாற்றம் நடைபெற்ற வண்ணம் தான் இருந்தது என்றும் அவர் வாதிட்டார்.

“ஒரு அறிவாளித்தனமான மூளை ஒரு பண மோசடியில் ஈடுபட்டால் எப்படி இருக்கும் என்பதை இந்த நீதிமன்றம் அறிய வேண்டும். ஒன்றின் மீது ஒன்றாக திரைகள் படர்ந்து இந்த ஊழல் மூடி மறைக்கப்பட்டுள்ளது. அனைத்து குற்றங்களும் டிஜிட்டலில் நடைபெற்றுள்ளது. அதனால் தான் அதற்கான ஆவணங்கள் சட்டென அழிக்கப்பட்டுவிடுகின்றன.

இதுவரை அமலாக்கதுறை சார்பில் நடத்தப்பட்ட முக்கிய விசாரணைகள், கேட்கப்பட்ட கேள்விகள், திரட்டப்பட்ட ஆதாரங்கள் தான் உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட  கவரில் வைத்து தரப்பட்டது. சிதம்பரத்திற்கு எதிராக உறுதியான சாட்சியங்களும், ஆதாரங்களும் கண்டறியப்பட்டிருந்தால் நிச்சயமாக, சிறப்பு நீதிபதி தான் காவல் விசாரணையில் வைத்து விசாரிப்பது குறித்து முடிவெடுத்திருந்திருப்பார்” என்று துஷார் மேத்தா வாதிட்டார்.

மேலும் படிக்க : ஐ.என்.எக்ஸ் வழக்கில் இதுவரை நடைபெற்றது என்ன?

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, குற்றவாளிக்கு எதிராக திரட்டப்பட்ட ஆதாரங்களை குற்றவாளியிடமோ, அவர் தரப்பு வழக்கறிஞர்களிடமோ கட்ட வேண்டிய கட்டாயமில்லை என்று வாதாடினார் துஷார் மேத்தா. கபில் சிபில் “நான் ஆதாரங்களின் நகல்கள் எதையும் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் கூறிய ஆதாரங்கள் பற்றி ஏற்கனவே இங்கு அனைவரும் அறிந்த பின்பு அதை கோர்ட்டில் வெளிப்படையாக சமர்பிப்பதில் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது” என்று கேள்வி எழுப்பினார்.  மேத்தா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் எங்கெல்லாம் சிதம்பரத்திற்கு சொத்துகள் இருக்கிறது என்பது குறித்து தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Inx media case chidambaram playing victim card says ed in supreme court

Next Story
“ராஜினாமா பற்றி முடிவு எடுக்கவில்லை… கொடுக்கப்பட்ட பொறுப்பினை தொடரவும்”- ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்IAS officer Kannan Gopinathan resigns, Kerala based IAS officer Kannan Gopinathan, Kannan Gopinathan IAS Officer special interview
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com