scorecardresearch

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு : அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி!

உரிய ஆவணங்களுடன் ஜூலை 17ம் தேதி இந்திராணி முகர்ஜியை நேரில் ஆஜர்படுத்த கோரி நீதிபதி அருண் பரத்வாஜ் உத்தரவு

INX Media Case Indrani Mukerjea turned Approver
INX Media Case Indrani Mukerjea turned Approver

INX Media Case Indrani Mukerjea turned Approver :  2007ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருந்த் போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கபெற்ற நிதி ரூ.305 கோடிக்கு ஒப்புதல் வழங்கினார். அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (Foreign Investment Promotion Board – FIPB) இந்த நிதிக்கான ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஐ.என்.எக்ஸ் முன்னாள் இயக்குநர்கள் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜீ மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வெளிநாட்டு நிதியை பெற, கார்த்தி சிதம்பரம் உதவிய காரணத்தால் அவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தற்போது அவர் ஜாமீனில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா முன்னாள் இயக்குநர் இந்திராணி முகர்ஜிக்கு மன்னிப்பு வழங்கியது டெல்லி சிறப்பு நீதிமன்றம். ஏற்கனவே இவ்வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவினை நேற்று விசாரித்தார் நீதிபதி அருண் பரத்வாஜ். விசாரணையில்,  ஐ.என்.எக்ஸ் வழக்கில் இந்திராணி பெயர் இருப்பதால்,  அவர் அப்ரூவராக மாறும் போது வழக்கை விசாரிக்க அது உதவியாக இருக்கும் என்று சி.பி. ஐ தரப்பு கூறியது.

சி.பி.ஐ தரப்பு கருத்தினை ஏற்றுக் கொண்டு இந்திராணியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்திராணி அப்ரூவராக மாறுவதற்கு நீதிபதி அனுமதி அளித்ததார். பின்னர்  உரிய ஆவணங்களுடன் ஜூலை 17ம் தேதி இந்திராணி முகர்ஜியை நேரில் ஆஜர்படுத்த கோரி நீதிபதி அருண் பரத்வாஜ் உத்தரவிட்டுள்ளார்.  தன்னுடைய மகள் ஷீனா போரா கொலை வழக்கில் ஏற்கனவே மும்பையில் உள்ள பைகுல்லா சிறையில் தன் கணவர் பீட்டர் முகர்ஜியுடன் தண்டனை பெற்று வருகிறார் இந்திராணி முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு : சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Inx media case indrani mukerjea turned approver

Best of Express