ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆக.29 வரை தடை நீட்டித்தது சுப்ரீம் கோர்ட்

ப.சிதம்பரம் தரப்பு வைத்த அத்தனை வாதங்களுக்கும் இன்று பதிலளிக்கப்படும் என்று சிபிஐ தரப்பு கூறியுள்ளது

INX media case p chidambaram cbi ed supreme court updates - அமலாக்கத்துறை கைதில் இருந்து தப்புவாரா ப.சிதம்பரம்? - உச்சநீதிமன்றத்தில் இன்றைய வாதங்களின் அப்டேட்ஸ் இங்கே
Chidambaram INX Media Case

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைதுக்கு எதிராக ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஐந்து நாட்களாக சிபிஐ அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 30ம் தேதி வரை விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ப. சிதம்பரம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க – இன்றைய தமிழக செய்திகள் தொடர்பான அனைத்து உடனடி அப்டேட்டுகளையும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

அதன்படி, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் சிபிஐ ப. சிதம்பரத்தை காவல் எடுத்ததே தவறு. அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு மனுவில் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று முன் ஜாமீன் கோரப்பட்டுள்ளது. இதில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான வழக்கில் இன்று(ஆக.28) மாலை வரை சிதம்பரத்தை கைது செய்யக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இவ்விரண்டு இரண்டு மனுக்கள் மீதும் நேற்று விசாரணை நடந்தது. ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதிட்டனர். இந்த வாதத்திற்கு பதில் அளிக்க சிபிஐ தரப்பு கூடுதலாக 24 மணி நேரம் கேட்டது. இதனால் இந்த வழக்கு இன்று மதியம் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

ப.சிதம்பரம் தரப்பு வைத்த அத்தனை வாதங்களுக்கும் இன்று பதிலளிக்கப்படும் என்று சிபிஐ தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறை தரப்பு வாதம் துவங்கியுள்ளது.

அமலாக்கத்துறை தரப்பு வாதம்

அமலாக்கத்துறையின் (ED) சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடி வருகிறார்.

துஷார் மேத்தா வாதம்  

“பண மோசடி பல அடுக்குகளை கோருகிறது. அதை மறைத்து வைக்க மறைவிடம் தேவை. ஆகையால், ஒரு முட்டாள் மனிதரால் பண மோசடி செய்ய முடியாது. நாம் மிக புத்திசாலியான நபரிடம் விசாரணை செய்து வருகிறோம். இந்த குற்றங்கள் கண்காணிக்க வேண்டும், இதுகுறித்த ஆதாரங்களை சேகரிப்பது கடினம்”.

‘சட்டவிரோத பணப்பரிமாற்றம் குற்றமல்ல; மிகப்பெரிய குற்றம்’

ப.சிதம்பரம் அறிவாளி மற்றும் சாதுரியம் மிக்கவர் என்பதால் இதுபோன்ற சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் ஈடுபட முடிந்தது.

PMLA சட்டத்தின் படி கைது செய்வதற்கான வழிமுறைகளை துஷார் மேத்தா வரிசைப்படுத்தினார்.

-அங்கீகரிக்கப்பட்ட இயக்குநரை மட்டுமே கைது செய்ய முடியும்
-ஒரு குற்றம் நடந்ததாக நம்புவதற்கான காரணங்களின் அடிப்படையில் கைது செய்யப்படலாம்
-கைது செய்வதற்கான காரணங்கள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும்
-வைத்திருக்கும் பொருளின் அடிப்படையில் கைது
-முத்திரையிடப்பட்ட கவரில் தீர்ப்பளிக்கும் அதிகார மையத்திடம் ஆதாரங்கள் வழங்கப்பட வேண்டும்

ப.சிதம்பரத்தை கைது செய்தது பழிவாங்கும் செயலோ, வேட்டையாடுதலோ அல்ல; வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளோம்.

வழக்கில் இருந்து ப.சிதம்பரம் தப்பிக்க முயற்சிக்கிறாரே தவிர ஒத்துழைப்பு வழங்கவில்லை

வீடு, சொத்துகளின் விவரம், நிறுவனங்கள் என வழக்கில் தொடர்புடைய பல ஆதாரங்கள் வெளிநாட்டு வங்கி மூலம் கிடைத்துள்ளன என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், நாளை(ஆக.29) வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Inx media case p chidambaram cbi ed supreme court updates

Next Story
திருப்பதியில் இந்துக்கள் அல்லாத ஊழியர்கள்; மீண்டும் சர்ச்சை!Temples in India - List of Famous temple in India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com