New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/a9.jpg)
Tamil Nadu news today in tamil
ஃபரூக் அப்துல்லா மற்றும் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
Tamil Nadu news today in tamil
INX media case P Chidambaram detention Karti Chidambaram criticized : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட்டில், எந்த ஒரு விசாரணை குழுவினாலும் இந்த வழக்கு கிரிமினல் ஆக்ட் என்று உறுதி செய்ய இயலாது என்று கூறியுள்ளார்.
Citizens of India : To protect the fundamental right of liberty of Former Finance Minister Mr.P.Chidambaram - Sign the Petition! https://t.co/JSb9f0Mhw1 via @ChangeOrg_India
— Karti P Chidambaram (@KartiPC) September 21, 2019
மேலும் 12 அரசாங்க அதிகாரிகள், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக செயல்பட்ட நேரம், எடுத்த முடிவுகள் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சி.பி.ஐ. எங்கள் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்து இன்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்டது. தனிமனித சுதந்திரம் என்பது இந்த நடவடிக்கையினால் முற்றிலுமாக மறுதலிக்கப்பட்டுள்ளது. அதிசயம் என்னவென்றால் இந்த கைது குறித்து சிவில் சொசைட்டி மிகவும் அமைதி காத்து வருவது தான்.
உண்மையான நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை எங்களுக்கு அடையாளம் காட்டிய நேரம் இது. அதற்காக நாங்கள் நன்றி கூறிக் கொள்கின்றோம். உண்மை மற்றும் நீதி எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். ப.சிதம்பரம் வரிசையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா மற்றும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டிருப்பதையும் அவர் மேற்கோள் காட்டினார். இது போன்று கைது நடவடிக்கைகள் மேலும் தொடரலாம். இது தான் ஆரம்பம் என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : திகார் சிறையில் ப.சிதம்பரம்: வார்டு-2, அறை எண் 7, கட்டில்- மின்விசிறி வசதி உண்டு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.