ப.சிதம்பரத்தை சந்தித்து திரும்பிய சோனியா காந்தி… உத்வேகம் அளிப்பதாக கார்த்தி சிதம்பரம் ட்வீட்

அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது

By: September 23, 2019, 12:00:53 PM

INX media case Sonia Gandhi Manmohan Singh met P Chidambaram : ஐ.என்.எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் ப.சிதம்பரம், டெல்லி திஹார் ஜெயிலில் நீதிமன்றக் காவலில் இருக்கின்றார். அவரை இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேரில் சென்று பார்த்துள்ளனர். ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரமும் இன்று முன்னாள் நிதியமைச்சரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

INX media case Sonia Gandhi Manmohan Singh met P Chidambaram : ப.சிதம்பரம் ட்வீட்

ப.சிதம்பரத்தை சந்தித்து திரும்பிய பிறகு, சிதம்பரம் சார்பில் அவருடைய ட்விட்டர் கணக்கில் இருந்து அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பின்வருமாறு ட்வீட் செய்துள்ளனர். ”காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் என்னை சந்தித்தை நான் பெருமையாக நினைக்கின்றேன். காங்கிரஸ் கட்சி திடமாக இருக்கும் காலம் வரை நானும் நம்பிக்கையுடனும் திடமாகவும் இருப்பேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில் வேலையை இழத்தல், வேலையில்லா திண்டாட்டம், குறைந்த ஊதியத்தில் வேலை, கூட்டு வன்முறை தாக்குதல், காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறைபிடிப்பு இவை அனைத்தையும் தவிர நாடு நலமாகவே இருக்கிறது என்றும் ட்வீட் செய்திருக்கிறார்.

கார்த்தி சிதம்பரம் ட்வீட்

ப.சிதம்பரத்தை சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சந்தித்தை தொடர்ந்து, நான் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றும், தற்போது இருக்கும் இந்த சூழலில் தலைவர்களின் சந்திப்பு, இந்த போராட்டத்தில் வெற்றிபெற உத்வேகம் அளிக்கிறது என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

ஆகஸ்ட் 19ம் தேதி, டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில் 21ம் தேதி அவரை கைது செய்தது சிபிஐ. தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் அவர் கடந்த விசாரணையின் போது அமலாக்கத்துறையில் சரணடைய விரும்புவதாக கூறினார். இருப்பினும் அமலாக்கத்துறையினரோ, சிதம்பரம் சிறையில் இருக்கும் வரையில் தான் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் ஒன்றும் செய்யமாட்டார் என்று வாதாடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : தெலுங்கானா ஆளுநருக்கு சிறப்பு பாதுகாப்பு… பழைய அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Inx media case sonia gandhi manmohan singh met p chidambaram at tihar jail

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X