Telangana Governor Tamilisai Soundararajan security personnel replaced : தமிழிசை சவுந்தரராஜன் செப்டம்பர் மாதம் 8ம் தேதி தெலுங்கானாவின் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு ஆளுநராக பணியாற்றிய இ.எஸ்.எல். நரசிம்மனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் இருந்த முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முந்தைய ஆளுநர் இருந்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கு நெருக்கமான மூன்று அதிகாரிகள், மூத்த பாதுகாப்பு அதிகாரி (CSO), மற்றும் தனி பாதுகாப்பு அதிகாரிகள் (PSOs) என அனைவரும் கூண்டாக மாற்றப்பட்டுள்ளனர். சி.எஸ்.ஒ அதிகாரிக்கு பதிலாக இண்டெலிஜென்ஸ் செக்யூரிட்டி விங் எனப்படும் உளவுத்துறை பாதுகாவலர்கள் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றார்கள். மேலும் 6 என்ற எண்ணிக்கையில் இருந்த பி.எஸ்.ஒ அதிகாரிகள் எட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் அதிகாரத்திற்கு வரும் முனைப்போடு ஏற்கனவே பாஜக செயல்பட்டு வந்த நிலையில், தமிழிசையும் பாஜகவில் முக்கிய பங்கு வகித்து வந்தவர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டுமல்லாது ராஜ் பவன் விவகாரங்களிலும் முக்கியத்துவம் செலுத்தி வருகிறது தெலுங்கானா அரசு. இண்டெலிஜென்ஸ் செக்யூரிட்டி விங் தான் முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது. இதுவரையில் 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிகாரிகள், தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்லாமல், கூடவே, ராஜ்பவனுக்கு யார் யாரெல்லாம் வருகின்றார்கள், அவர்களிடம் முன்னனுமதி இருக்கின்றதா என்பதை சோதிப்பது உள்ளிட்டவையும் இவர்கள் மேற்கொள்கின்றார்கள்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Telangana governor tamilisai soundararajan security personnel replaced with new staffers
கண்ணீர் விட்ட சூப்பர் சிங்கர்: மேடையில் பாடி சம்பாதித்த பணத்தை யாராவது இப்படி செய்வார்களா?
திமுக – காங். தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம்; இறுதி நிலையை எட்டுவது எப்போது?
சாதம் வடிநீர், சிறிதளவு எண்ணெய்… மிருதுவான சப்பாத்தி சீக்ரெட் இதுதான்!
வெந்தயம்… கல் உப்பு… சாஃப்ட் இட்லி சீக்ரெட்: சிம்பிள் செய்முறை இங்கே!