INX media case supreme court hearing today highlights : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ப.சிதம்பரம், தொடர்ந்து ஜமீன் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு இன்று வரை சி.பி.ஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் செப்டம்பர் 5 வரை திகார் ஜெயலில் அடைக்க தடை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஜாமீன் குறித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நேற்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
ப.சிதம்பரம் சார்பில் வாதாடிய கபில் சிபில், ப.சிதம்பரத்துக்கு 74 வயது ஆகிறது என்றும், அதனால் அவரை திகார் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டாம் என்றும், மாறாக வீட்டுக் காவலில் வைத்து வேண்டுமானால் விசாரணை செய்யுங்கள் என்றும் வாதாடினார்.
மேலும் படிக்க : செப்.5ம் தேதி வரை சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது – சுப்ரீம் கோர்ட்! உத்தரவை எதிர்த்து சிபிஐ முறையீடு
இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணை
அதனைத் தொடர்ந்து இடைக்கால ஜாமீன் குறித்த மனுவை இன்று மதியம் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது டெல்லி சிறப்பு நீதிமன்றம். ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலுக்கு மீண்டும் அனுப்பியதை எதிர்த்து சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பில் இன்று காலை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ப.சிதம்பரத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்தது இல்லை. சி.பி.ஐ காவலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தான் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய உச்ச நீதிமன்ற வாதம்
ப.சிதம்பரத்தை இனியும் சி.பி.ஐ காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே உடனடியாக அவரை நீதிமன்ற காவலில் எடுத்து திகார் சிறைக்கு அனுப்புங்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார்.ஐ.என்.எக்ஸ் வழக்கில், ப.சிதம்பரம் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில், சி.பி.ஐ காவல் தொடரும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு. வருகின்ற 5ம் தேதி வரை இதே நிலை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது