பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்படும் சொத்துகள் என்ன ஆகும் ?

வீடுகள் சிதிலமடையலாம். கார்கள் போன்றவை மத்திய வேர்ஹவுசிங்கிற்கு அனுப்பப்படும்.

INX Media PMLA Case : கடந்த வியாழக்கிழமை அன்று முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்திக் சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை. ஐஎன்எக்ஸ் வழக்கில் சோமர்செட், பார்சிலோனா, ஸ்பெயின், கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் இருக்கும் அவருடைய சொத்துகளை முடக்கியிருக்கிறது.

இந்த வழக்கில் முடக்கப்பட்ட சொத்துகள் குறித்து மேலும் படிக்க

பண மோசடை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் சிபிஐ இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஃபாரீன் இன்வெஸ்ட்மெண்ட் ப்ரோமசன் போர்டினை உதவியாக வைத்துக் கொண்டு வெளிநாட்டு உதவியினை சட்டத்திற்கு புறம்பாக ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு பெற்றுக் கொடுத்தது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பணமோசடி தடுப்புச் சட்டம் பிரிவு 5ன் கீழ், அமலாக்கத்துறை இயக்குநர் அல்லது அவரின் கீழ் வேலை பார்க்கும் இயக்குநர்கள் ஒரு வழக்கின் தொடர்பாக, அதில் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகளை வழக்கில் இணைக்க முழு அதிகாரமும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நபரின் சொத்துக்களை முடக்க அமலாக்கத் துறை இயக்குநர் அளிக்கும் உத்தரவானது 180 நாட்கள் வரை செல்லத்தக்கதாகும்.

அந்த வழக்கிற்கும் முடக்கப்பட்ட சொத்திற்கும் சம்பந்தம் ஏதும் இல்லையென்றால் முடக்கப்பட்ட சொத்துகளை திரும்ப அளித்துவிடும் அமலாக்கத்துறை. வெளிநாட்டில் இருக்கும் சொத்துகளை, தக்க நீதிமன்றங்களின் வாயிலாக, சொத்துகள் இருக்கும் நாடுகளுக்கு Letter Rogatory கொடுத்து முடக்கலாம்.

முதல் 180 நாட்களுக்குள் முடக்கப்பட்ட சொத்திற்கும் அந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமாவது இருக்கிறதா என்பதை அட்ஜுடிகேடிங் அதாரிட்டி உறுதி செய்ய வேண்டும். அதுவரை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அந்த சொத்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அட்ஜுடிகேடிங் அதாரிட்டி முடக்கப்பட்ட சொத்துகள் ரீதியான குற்றச்சாட்டினை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்யப்பட்ட பின்னர் முடக்கப்பட்ட சொத்துகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். ஆனால் வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வெளியாகும் வரை அந்த சொத்துகளின் உரிமையாளர் அந்த சொத்தினை அனுபவிக்க இயலாது. அதே நேரத்தில் முடக்கப்பட்ட சொத்துகளில் வாழும் இல்லம் இருந்தால், அதனை உடனடியாக காலி செய்யக் கோரி அமலாக்கத்துறை அறிவுறுத்தும்.

முடக்கப்பட்ட சொத்துக்களை என்ன செய்யும் ?

பொதுவாக 50% மட்டுமே ஒரு சில சொத்துகளை முடக்க இயலும். பொதுவாக ஒரு குறிப்பிட்ட கட்டிடத்திற்கு ஒரே ஒரு வாசல் மட்டும் இருக்கும் பட்சத்தில், முழுமையான சொத்து முடக்கம் என்பது அந்த சொத்தின் மற்றொரு உரிமையாளரை பாதிக்கும் என்பதால் இதனை நடைமுறைப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

வீடுகள் பல வருடங்களுக்கு பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கும். முறையான பாதுக்காப்புகள் இல்லாமல் போகும் பட்சத்தில் வீடுகள் சிதிலமடையத் தொடங்கும். முடக்கப்பட்ட கார்களை மத்திய வேர் ஹவுசிங் கார்ப்பரேசனுக்கு அனுப்பிவிடும். அங்கே நிறுத்தப்படும் காருக்கு வாடகை அளிக்கும் அமலாக்கத் துறை. விசாரணைக்கான காலம் தாழ்த்தப்படும் பட்சத்தில் கார்களின் உண்மையான மதிப்பினை விட அதிக அளவு வாடகை தரும் அமலாக்கத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close