Advertisment

IRCTC பயனாளரா நீங்க? : மெயில் இன்பாக்சை செக் பண்ணுங்க...அலர்ட் ஆகிக்கோங்க

கேன்சல் செய்யப்பட்ட பயனாளர்களுக்கு போன் செய்து அவர்களது தகவல்களை கேட்பதில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
irctc booking tickets, irctc booking time, irctc booking ticket, irctc booking tickets online, irctc booking tickets train, irct, indian railways ticket booking online, indian railways ticket booking,indian railways ticket booking app, irctc ticket booking

irctc booking tickets, irctc booking time, irctc booking ticket, irctc booking tickets online, irctc booking tickets train, irct, indian railways ticket booking online, indian railways ticket booking,indian railways ticket booking app, irctc ticket booking

IRCTC warning mail to its users : irctctour என்ற இணையதளம், ஐஆர்சிடிசி பெயரை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறது. ஐஆர்சிடிசி பயனாளர்கள், இதுபோன்ற தவறான இணையதளங்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி, தனது பயனாளர்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இதுதொடர்பாக, ஐஆர்சிடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, irctctour என்ற இணையதளம், IRCTC இணையதளம் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கேஷ் பேக் திட்டங்கள் உள்ளன. மக்களை ஏமாற்றுவதற்காக இதுபோன்ற திட்டங்கள் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த இணையதளத்தின் மூலம் பணம் செலுத்தி, சிலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். எங்களுக்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்ததையடுத்து, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

IRCTC-ன் புதிய அறிவிப்பு - இனி ஆன்லைனிலேயே ரயில் முன்பதிவு சார்ட்டை சரி பார்க்கலாம்

IRCTC Booking: முதல்ல டிரெய்ன் டிக்கெட் பண்ணுங்க, அப்புறம் காசு கொடுக்கலாம் - ஐஆர்சிடிசி-யின் புதிய சேவை

ஐஆர்சிடிசி தனது பயனாளர்களுக்கு அனுப்பியுள்ள இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

Dear All,

Kind Attention!!!

IRCTC - IT Centre has received two complaints recently for fraud booking in the name of IRCTC. The fraud website is www.irctctour.com. The tour confirmation voucher of fraud is exactly same of IRCTC. The mentioned details are mobile no.9999999999, landline no. +91 6371526046 & email–id: irctctours2020@gmail.com are being used for selling tourism products in the name of IRCTC.

This office has already filed the FIRs from counter as well as through online. An alert scroller has been updated in the tourism homepage.

It is requested to all to create awareness among the near & dear ones through different modes of communication; in order to stop the fraud activities.

Looking for positive cooperation from all...

Thanks

IRCTC

ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் விற்பனை மற்றும் கேட்டரர்ஸ் சேவைகளை மட்டுமே வழங்குகிறது. மற்றபடி கேன்சல் செய்யப்பட்ட பயனாளர்களுக்கு போன் செய்து அவர்களது தகவல்களை கேட்பதில்லை. வங்கிக்கணக்கு எண், ஏடிஎம் கார்டு விபரங்கள், பின் நம்பர், டிக்கெட் புக் செய்யும்போது வரும் ஓடிபி உள்ளிட்ட விபரங்களை, ஐஆர்சிடிசி ஒருபோதும் தனது பயனாளர்களிடமிருந்து கேட்பதில்லை. பயனாளர்கள், இந்தமாதிரி முறைகேடான இணையதளங்களிலிருந்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment