ரயில் பயணத்தில் சாப்பாடு அதிக விலைக்கு கிடைக்கிறதா? இதோ ஒரு தீர்வு

IRCTC food price : ரயிலுக்கு உள்ளே கிடைக்கும் உணவுகளின் விலை 90 முதல் 140 ரூபாய் வரை இருப்பதாகவும், அதே உணவு வெளியே 50 ரூபாய்க்குள் இருப்பதாகவும் புகார்கள் கொடுக்கப்பட்டது.

Indian Railways IRCTC earns several thousand crores
Indian Railways IRCTC earns several thousand crores

IRCTC : புதிய வருடம் பிறப்பதன் ஆரம்பமாக ஒரு புதிய மாற்றத்தை உணவு விலையில் ரயில் பயணிகளுக்காக செய்துள்ளது இந்தியன் ரயில்வேத்துறை.

2019ம் ஆண்டு ஜனவரி  1ம் தேதி முதல், பாட்னா – கோட்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் சைவம் மற்றும் அசைவு உணவுகளின் விலை 50 முதல் 55 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் ரயில்வே நிலையத்தில் உள்ள ‘ஜன் அஹார்’ என்ற கவுண்டரில் பயணிகள் செலுத்தலாம்.

IRCTC food price: ஐ.ஆர்.சி.டி.சி உணவு விலை

ரயிலில் பயணிக்கும் பல பயணிகளிடம் இருந்து ரயில்வேத்துறைக்கு அதிகமாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயிலுக்கு உள்ளே கிடைக்கும் உணவுகளின் விலை 90 முதல் 140 ரூபாய் வரை இருப்பதாகவும், அதே உணவு வெளியே 50 ரூபாய்க்குள் இருப்பதாகவும் புகார்கள் கொடுக்கப்பட்டது. எனவே ஐ.ஆர்.சி.டி.சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது, மேலும் இந்த நடவடிக்கையை மேற்பார்வையிடவும், கேட்டரிங் பொறுப்பில் ஒருவர் நியமனம் செய்துள்ளனர்.

முதியோர்களும் பெண்களும் இனி லோயர் பெர்த் கேட்டு சண்டை போட வேண்டாம்… உங்களுக்கே முன்னுரிமை

முதற்கட்டமாக இந்த மேற்பார்வையை, கிழக்கு மத்திய தளங்களுக்கு செல்லும் ரயில்களில் அமல்படுத்தப்படுகிறது. சம்பூர்ணம் கிரான்தி எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, ஷ்ரம்ஜினி, பாட்னா – கோட்டா, பீகார் சம்பர்க் கிரான்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வைஷாலி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

உங்களின் பயணத்தை எளிமையாக்கும் IRCTC .. டிக்கெட் புக் பண்ண இத்தனை வசதிகளா?

இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி மேனேஜர் ராஜேஷ் குமார், “பாட்னா – கோட்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் 50 முதல் 55 ரூபாய் வரை உணவு அளிக்கப்படும். பொதுமக்களின் புகார்களை  ஏற்று இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். விரைவில் எல்லா ரயில்களிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Irctc food price

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com